Tamil Nadu lockdown | தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கை நீட்டிக்க முடிவு?

மாதிரிப் படம்

கொரோனா பரவல் அதிகரித்துள்ள மாவட்டங்களில், கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
    தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு வரும் 7ஆம் தேதி வரை அமலில் உள்ளது. எனினும், பொதுமக்களுக்கு தேவையான மளிகை, காய்கறிகள் தடையின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வரும் 7ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைவதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ந்து, ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் 7ம் தேதி காலை 6 மணியுடன் முடியும் நிலையில், அதனை 14ம் தேதி வரை நீட்டிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதேபோல், கொரோனா பரவல் அதிகம் உள்ள மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்கவும், கொரோனா பரவல் குறைந்துள்ள மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மேலும், ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிப்பது குறித்த அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: