முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகம் முழுவதும் 20,453 குடியிருப்புகளை இடிக்க நிபுணர் குழு பரிந்துரை

தமிழகம் முழுவதும் 20,453 குடியிருப்புகளை இடிக்க நிபுணர் குழு பரிந்துரை

திருவொற்றியூரில் இடிந்தது விழுந்த குடியிருப்பு

திருவொற்றியூரில் இடிந்தது விழுந்த குடியிருப்பு

HUDCO : சேதமடைந்துள்ள குடியிருப்புகளை உடனடியாக இடித்துவிட்டு புதிய குடியிருப்பு கட்ட வேண்டும் என்றும் தொழில்நுட்பக்குழு பரிந்துரைத்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகம் முழுவதும் 20, 453 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை இடிக்க, அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

கடந்த மாதம் சென்னை திருவொற்றியூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 25 ஆண்டுகளுக்கு முன்பு அந்த வாரியம் மூலம் கட்டப்பட்ட, குடியிருப்புகளை அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர் குழு ஆய்வு செய்ய அரசு அறிவுறுத்தியது.

அதன்படி, 22,271 குடியிருப்புகளில் அந்த குழு ஆய்வு செய்தது. இதில் 20 ஆயிரத்து 453 குடியிருப்புகள் சேதமடைந்திருப்பதாக தனது அறிக்கையில் குழு தெரிவித்துள்ளது.

Must Read : அவிநாசியில் சோளக் காட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கியதில் வன ஊழியர் காயம்

இவற்றை உடனடியாக இடித்துவிட்டு புதிய குடியிருப்பு கட்ட வேண்டும் என்றும் தொழில்நுட்பக்குழு பரிந்துரைத்துள்ளது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் ஆய்வு செய்து தமிழக அரசு இறுதி நடவடிக்கை எடுக்கும் எனக் கூறப்படுகிறது.

First published:

Tags: Building collapse, Chennai