ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஈசிஆர் வடிகால் திட்டத்திற்கு கடற்கரை மேலாண்மை ஆணைய அனுமதி அவசியம் - வல்லுநர் குழு அறிக்கை

ஈசிஆர் வடிகால் திட்டத்திற்கு கடற்கரை மேலாண்மை ஆணைய அனுமதி அவசியம் - வல்லுநர் குழு அறிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கிழக்கு கடற்கரை சாலைப் பகுதிகளிலுள்ள ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைப்பதற்கு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணைய அனுமதி தேவை என்று வல்லுநர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சென்னை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதிகளை ஏற்படுத்த 4,034 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம், கோவளம் வடிநிலப்பகுதியில் துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், பெருங்குடி, பள்ளிக்கரணை, காரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு பணிகள் துவங்கப்பட்டது.

இத்திட்டத்திற்கு தற்போது அக்கரை பாலவாக்கம், கொட்டிவாக்கம், உத்தண்டி, குடுமியாண்டித்தோப்பு, பனையூர், ராஜீவ் காந்தி நகர் பகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இயற்கையாகவே மழைநீர் வடியும் இடங்களில் வடிகால் அவசியமில்லை எனவும் கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்காத காரணத்தால் தடை விதிக்கக் கோரி குடியிருப்பு வாசிகள் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இதுகுறித்து ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்துள்ளது.

வல்லுநர் குழுவின் இடைக்கால ஆய்வறிக்கையில்

மாநகராட்சி உரிய அனுமதி பெறாமல் திட்டத்தை தொடங்கியுள்ளது. கட்டுமானத்தை தொடங்கிய பிறகு அனுமதி அளிக்கும் ( Post facto) அம்சங்கள் சட்டத்தில் இல்லை.

கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி பெறாமல் திட்டத்தை துவக்கியது தவறுதான் என தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே இத்திட்டத்திற்கான நிதி உதவியை ஜெர்மன் நாட்டு மேம்பாட்டு வங்கி நிறுத்திி விட்ட நிலையில் தற்போது வல்லுனர் குழுவின் அறிக்கை திட்டத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Karthick S
First published:

Tags: Rain water