’ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு’: அகர்வால் குழு அறிக்கை

ஸ்டெர்லைட் ஆலை (கோப்புப் படம்)

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முன் ஆலை நிர்வாகம் விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்கவில்லை என அகர்வால் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது

  • News18
  • Last Updated :
  • Share this:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தவறு என்று தருண் அகர்வால் தலைமையிலான குழு பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்ல தமிழக அரசு அனுமதி மறுப்பதாகவும், கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான பணிகளை செய்ய உள்ளே செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள  அனுமதி அளித்தது. அத்துடன் ஆலையை ஆய்வு செய்ய உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழுவை அமைத்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்திய இந்த விசாரணைக்குழு மக்களிடமும் கருத்து கேட்டு நேற்று முன்தினம் அறிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு இன்று விசாரணை செய்தது.

அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தவறு என்று தருண் அகர்வால் குழு தாக்கல் செய்துள்ள  அறிக்கையில் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also see...
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின், காற்றில் மாசு அளவு குறைந்துள்ளது.

Published by:Vaijayanthi S
First published: