ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசு மருத்துவமனைகளிலிருந்து மாத்திரைகளை சொந்த கிளினிக்குகளுக்கு எடுத்துச் செல்வதா? - உயர்நீதிமன்றம் வேதனை!

அரசு மருத்துவமனைகளிலிருந்து மாத்திரைகளை சொந்த கிளினிக்குகளுக்கு எடுத்துச் செல்வதா? - உயர்நீதிமன்றம் வேதனை!

அரசு மருத்துவமனை மருந்துகள்

அரசு மருத்துவமனை மருந்துகள்

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், மக்களுக்காக கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகளை, தங்களின் தனியார் கிளினிக்குகளுக்கு எடுத்துச் செல்வதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • chennai |

அரசு மருத்துவமனையில் மக்களுக்காக கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகளை அங்கு பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், தங்களின் தனியார் கிளினிக்குகள் எடுத்துச் செல்வதாகவும், அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை அரசு மருத்துவமனை மருந்து கிடங்கு பொறுப்பாளராக பணியாற்றிய முத்துமாலை ராணி, அளவுக்கு அதிகமாக மருந்தை கொள்முதல் செய்ததாக , அவரது ஓய்வூதியத்தை அரசு நிறுத்தி வைத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த மாதம் 26 ஆண்டு வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவது, கொரோனா பாதிப்புக்கு பின், பல புதிய நோய்கள் பரவுவதற்கு காரணம் என்ன போன்றவற்றை பற்றி விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இது என்ன பெரிய மழை.. இனிமேல்தான் பருவமழையே தொடங்குது.. வெதர்மேன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருவதால், அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரப்பட்டது. அதனால் நவம்பர் 4 க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்ட வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த நிலையில்,அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கடந்த 30 ஆண்டுகளில் 30 விதமான புதிய தொற்றுகள் வன விலங்குகளிடம் இருந்து பரவி உள்ளது. மக்கள்தொகை அதிகரிப்பு, நகர்மயமாகுதல், நகரங்களுக்கு மக்கள் குடிபெயர்தல், வனம் அழிப்பு, மனிதர்களின் சமூக நடவடிக்கைகள், பாதுகாப்பற்ற நடைமுறைகள் காரணமாகவும், பருவநிலை மாற்றம், வெள்ளம் வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள் காரணமாகவும், புதிய வகை நோய்கள் பரவுகிறது என குறிப்பிடப் பட்டிருந்தது.

விசாரணையின் போது நீதிபதி,  மேலும் காலாவதியான மருந்துகள் குறித்து பேசுகையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும் விலையுயர்ந்த மருந்துகளை காலாவதியாக விடாமல், தேவையுள்ள பிற அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்ப உரிய நடைமுறைகளை அரசு வகுக்க வேண்டும். அதேபோல் அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் வழங்கப்படாததை அரசு உறுதி செய்ய வேண்டும் .

காலாவதி மருந்துகளை சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்களே திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். காலாவதி மருந்து விநியோகம் குறித்து புகார் செய்வதற்கான வசதிகளை அரசு உருவாக்கவேண்டும் என்றார்.

அனைத்து ஊழியர்களும் EPFO ​​ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

தான் வக்கீலாக இருந்த போது விபத்தில் காயமடைந்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை அளித்த டாக்டர் பரிந்துரைத்த மருந்து மருத்துவமனையில் இல்லை என்று செவிலியர் கூறியதாகவும் டாக்டர் வலியுறுத்திய பின்னர், அந்த மருந்து தனக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிட்ட நீதிபதி, இதுபோன்ற சம்பவங்கள் குறித்து நோயாளிகள் புகார் அளிக்க வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், மக்களுக்காக கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகளை, தங்களின் தனியார் கிளினிக்குகளுக்கு எடுத்துச் செல்வதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், அரசு ஆஸ்பத்திரிகளில் காலாவதி மருந்துகள் விநியோகிக்கப்படுவது தடுக்கும் நடைமுறையை வகுப்பது, புகார் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்துவது குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்வதாக கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 9-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Chennai High court