முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மகளிர் இலவச பேருந்தால் திமுக ஆட்சிக்கு புகழ்.. முதலமைச்சர் பெருமிதம்!

மகளிர் இலவச பேருந்தால் திமுக ஆட்சிக்கு புகழ்.. முதலமைச்சர் பெருமிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Breakfast scheme | பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டத்தை அடுத்த கட்டமாக 500 பள்ளிகளில் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு தற்போது முடிவு செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விரிவாக்கம் செய்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடைபெறும் அரசு விழாவில், புதிய திட்டங்களை தொடங்கி வைத்து பணி ஆணைகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். ஏற்றமிகு 7 திட்டங்களின் கீழ், ஊட்டச்சத்து குறைபாடின்றி குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவேண்டும் எனும் நோக்கில் சமூக நலத்துறை மூலம் சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சமூகநலத்துறை மூலம் சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத் தொடக்க விழா, திருநங்கைகளக்கு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா, நகராட்சி நிர்வாகத் துறை மூலம் தூய்மைப் பணியாளர்கள் தொழில் முனைவோர்களாக மாற்ற தனியாருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், சிறந்த தரமான மருத்துவம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் பெரும் வரவேற்பைப் பெற்ற முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை மாநகர மேயர், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,ஏற்றமிகு ஏழு திட்டங்கள் விழா நடைபெறும் இடத்தை எண்ணி பார்க்கும் போது அண்ணா பெயர் கொண்ட இந்த நூலகத்தில் இந்த நிகழ்வில் பங்கேற்பதில் உணர்ச்சியும் மகிழ்சியும் அடைகிறேன்.  இலக்கை நோக்கிய பயணத்தில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறோம். மகளிர் இலவச பேருந்தால் திமுக ஆட்சிக்கு பேரும் புகழும் கிடைத்துள்ளது.

தேர்தலுக்கு முன் திருச்சி மாநாட்டில் 7 உறுதி மொழிகளை அறிவித்தேன். கோட்டையில் என் முதல் கையெழுத்து மகளிருக்கான இலவச பேருந்து. 236 கோடி பயணங்களை பெண்கள் இதுவரை மேற்கொண்டுள்ளனர்.புதிய தொழில் நிறுவனங்களில் பணியாற்ற திறமையானவர்கள் இல்லை என தொழிலதிபர்கள் சிலர் கூறினார். 17 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு அரசு சார்பில் ஓராண்டில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நாளை எனது 70வது பிறந்தநாள், இதில் 55 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். மேலும், அரசியலில் தனக்கு யாரும் இலக்கு வைக்கவில்லை, தனக்கு தானே இலக்கு வைத்து கொண்டு சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

First published:

Tags: CM MK Stalin, Food, MK Stalin, Tamilnadu government