ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மடியில் கனமில்லை வழியில் பயமில்லை: ஆறுமுகசாமி விசாரணையில் அரசியல் உள்நோக்கம் உள்ளது: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

மடியில் கனமில்லை வழியில் பயமில்லை: ஆறுமுகசாமி விசாரணையில் அரசியல் உள்நோக்கம் உள்ளது: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி அதை சட்டப்படி நேர்மையாக நெஞ்சுரத்துடன் எதிர்கொள்வோம் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India

  மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்றும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் வெளியிட்டுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

  ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் தங்களது விரிவான விசாரணை அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர். ஜெயலலிதா மரணம் தொடர்பான 608 பக்கங்கள் கொண்ட ஆறுமுகசாமியின் விசாரணை அறிக்கை  சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் இடம்பெற்றன.

  இந்த நிலையில் ஜெயலலிதா மரணத்தில் அவரது தோழி சசிகலா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவர் சிவக்குமார் , அப்போதைய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மீது விசாரணை நடத்த வேண்டும் என அறிக்கையில் குற்றச்சாட்டப்பட்டு இருந்த நிலையில் இது குறித்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

  புதுக்கோட்டையில்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எங்களை உருவாக்கியவர் ,எங்களின் கடவுளாக திகழ்ந்தவர். அவர் மீண்டும் உயிருடன் வர வேண்டும் என்று வேண்டிய லட்சோப லட்சம் தொண்டர்களில் நானும் ஒருவன். அதிலும் ஒரு அமைச்சராக நான் என் கடமையை முழுமையாக செய்தேன்’ என தெரிவித்தார்.

  தற்போது ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அறிக்கையில் தன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள தகவல்கள்  முற்றிலும் உண்மைக்கு புறம்பான ஒருதலைபட்சமானது என்றும்  இவை அரசியல் உள்நோக்கத்துடன் சொல்லப்பட்ட கருத்துக்கள் என்று ஆணித்தரமாக கூறுவதாக பேசினார்.

  இதையும் படிங்க: டாஸ்மாக்கில் 2 நாட்களில் ரூ.464 கோடிக்கு மது விற்பனை.. மதுரையில் அதிகம்..

  இந்த ஆணையம் வெளியிட்டுள்ள கருத்துக்கள் உண்மைக்கு மாறாக  சொன்னதை சொல்லாதது போலவும் சொல்லாததை சொன்னது போலவும் இட்டுக்கட்டி சொல்லி உள்ளனர். இந்திய அளவில் அனைத்து பத்திரிகைகளாலும் விமர்சிக்கப்படக்கூடிய இந்த கருத்துக்கள் எங்களைப் பொறுத்தவரை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை இழந்து தவிக்க கூடியவர்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போன்ற கருத்துக்களாக உள்ளது. இருப்பினும் பொது வாழ்க்கையில் இருக்கக்கூடிய நாங்கள்  சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி அதை சட்டப்படி நேர்மையாக நெஞ்சுரத்துடன் எதிர்கொள்வோம் என்றார்.

  சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் இந்திய அளவில் உலக அளவில் நேர்மையான தூய்மையான அதிகாரி, களப்பணியாளர், கொரோனா காலத்தில் இந்த உலகமே உயிர் பயத்தில் வீட்டுக்குள் முடங்கி கிடந்த பொழுது நான் களத்தில் இருந்த பொழுது உயிரை துச்சம் என நினைத்து ராதாகிருஷ்ணனும் என்னுடன் இணைந்து களப்பணியாற்றினார். அவர் மீதும் இந்த விசாரணை கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆதாரம் அற்ற கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  ‘நானாக இருக்கட்டும் சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணனாக இருக்கட்டும் யாராக இருக்கட்டும் மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை, இதை சட்டப்படி எதிர்கொள்வோம்’ என்று தெரிவித்தார்.

  செய்தியாளர்: ரியாஸ் 

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Arumugasamy commission, Jayalalithaa, Vijayabaskar