Home /News /tamil-nadu /

தமிழகத்தில் கருத்துக் கணிப்பு பொய்யாகும்; தேசிய அளவில் எனக்கு தெரியாது - எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கருத்துக் கணிப்பு பொய்யாகும்; தேசிய அளவில் எனக்கு தெரியாது - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அனைத்து கருத்து கணிப்புகளிலும் கூறப்பட்டது.

  • News18
  • Last Updated :
    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தமிழகத்தில் கருத்துக் கணிப்புகள் பொய்யாகும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    மக்களவை தேர்தலுக்காக இறுதிகட்ட வாக்குப்பதிவு நேற்று மாலை முடிவடைந்த உடன், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை தேசிய அளவிலான ஊடகங்கள் வெளியிட்டன.

    இதில், பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அனைத்து கருத்து கணிப்புகளிலும் கூறப்பட்டது. அதேபோல, தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், கருத்து கணிப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், “தமிழகத்தில் கருத்து கணிப்புகள் பொய்த்துபோகும். 2016 தேர்தலில் நான் தோற்பேன் என்று கருத்து கணிப்பு வெளியிட்டனர். ஆனால், அதிக வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன்” என்று கூறினார்.

    “உங்கள் கூட்டணியில் உள்ள பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறியுள்ளது. அதுவும் பொய்க்குமா?” என்ற கேள்விக்கு, “நாங்கள் தமிழக அளவில் அரசியல் செய்கிறோம். தேசிய அளவில் கருத்து கணிப்புகள் குறித்து கருத்து கூற முடியாது” என்று பதிலளித்தார்.

    ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மக்களுக்காகவே திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது; மக்கள் எதிர்ப்பை மீறி திட்டங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்று கூறினார்.

    மேலும் படிக்க...

    நியூஸ் 18 கருத்துக் கணிப்பு! தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சியமைக்கும்

    நியூஸ் 18 கருத்து கணிப்பு! தமிழகத்தில் சாதிப்பது யார்?

     
    Published by:Sankar
    First published:

    Tags: Exit Poll 2019, Lok Sabha Election 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019

    அடுத்த செய்தி