• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Exit Poll Results 2021 | வட தமிழகத்தை தன் வசமாக்குகிறதா திமுக? தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் கூறுவது என்ன?

Exit Poll Results 2021 | வட தமிழகத்தை தன் வசமாக்குகிறதா திமுக? தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் கூறுவது என்ன?

 மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

2016ல் வட தமிழகத்தில் 40.2 சதவீதம் வாக்குகளை பெற்ற அதிமுக இம்முறை 31.5 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெறுகிறது.

  • Share this:
    தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என ரிபப்ளிக் டிவி, ஏபிபி நியூஸ் - சி வோட்டர், டைம்ஸ் நவ் - சி வோட்டர் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வட தமிழகத்தை திமுக தன் வசமாக்குவதாக ஏபிபி நியூஸ் - சி வோட்டர் கணித்துள்ளது.

    தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களில் ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அசாமில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற நிலையில், மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக நடந்தது.

    தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக - தேமுதிக, நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டியாக பார்க்கப்பட்டாலும். இதில் அதிமுக - திமுக இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் ஒருவரே மகுடம் சூடுவதற்கான வாய்ப்பு உள்ளது என பரவலாக கூறப்பட்டது. இதனிடையே, தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று பெரும்பாலான செய்தி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், அரசியல் வியூக நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.

    இந்நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் தெரிவித்துள்ளன. மேலும், வட தமிழகத்தை திமுக தன் வசமாக்குவதாக ஏபிபி நியூஸ் - சி வோட்டர் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக எபிபி நியூஸ் - சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவில், திமுக, 2021 தேர்தலில் 36 முதல் 38 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் வட தமிழகத்தில் 25 இடங்களை கைப்பற்றியிருந்தது. அதனை விட இந்த முறை கூடுதலாக 10 - 13 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.

    அதேபோல், கடந்த 2016 தேர்தலில், 22 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக, இம்முறை 8 முதல் 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளது. 2016ல் வட தமிழகத்தில் 40.2 சதவீதம் வாக்குகளை பெற்ற அதிமுக இம்முறை 31.5 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெறுகிறது. அதே நேரத்தில் 39.2 சதவீதம் வாக்குகளை மட்டும் கடந்த முறை பெற்றிருந்த திமுக, 51.6 சதவீதம் வாக்குகளை பெறுகிறது என்று எபிபி நியூஸ் - சி வோட்டர் கணித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: