Exit Poll Result 2021 : தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் யாருக்கு: 7 மணி முதல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

Exit Poll Result 2021 : தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் யாருக்கு: 7 மணி முதல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

வாக்குப்பதிவு

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பிற்கு தேர்தல் ஆணையம் தடைவித்திருந்தது. இந்த தடை இன்று மாலை 7 மணி வரை இருப்பதால் அதன் பின்னர் வெளியிடப்பட உள்ளன.

  • Share this:
    தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக  நடைபெற்றது. அதில் 71.43 சதவிகித வாக்குகள் பதிவாயின. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது.

    அதிமுக சார்பில் தற்போதய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில், அதிமுக 179 தொகுதிகளில் தனித்து களம் இறங்கியது. பாட்டாளி மக்கள் கட்சி 23 தொகுதிகளிலும், பாஜக 20 தொகுதிகளிலும், தமிழ் மாநில காங்கிரசு 6 தொகுதிகளிலும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம் மற்றும் பசும்பொன் தேசிய கழகம் ஆகியவை தலா 1 தொகுயில் களம் இறங்கின.

    எடப்பாடி பழனிசாமி


    திமுக தலைவர் மு.க.ஸ்டான் தலைமையிலான கூட்டணியில், திமுக 173 தொகுதிகளிலும், காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகள் தலா 6 தொகுதிகளிலும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தலா 3 தொகுதிகளிலும், மனித நேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், ஃபார்வார்ட் பிளாக் கட்சி, தமிழக வாழ்வு உரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை ஆகியவை தலா 1 தொகுதியிலும் களம் கண்டன.

    மு.க.ஸ்டாலின்


    நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தல்களத்தில் இறங்கி கூட்டணி அமைத்தது. கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். அதன்படி மக்கள் நீதி மய்யம் 144 தொகுதிகளிலும், ஐ.ஜே.கே 40 தொகுதிகளிலும், சமக 37 தொகுதிகளிலும், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி 10 தொகுதிகளிலும், தமிழ்நாடு இளைஞர் கட்சி 3 தொகுதிகளிலும் களம் இறங்கின.

    Kamal Haasan Vikram Teaser crossed 20 million views on YouTube
    கமல்ஹாசன்


    அமமுக கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அணைந்து களம் கண்டன. அதன்படி, அமமுக 161 தொகுதிகளிலும், தேமுதிக 60 தொகுதிகளிலும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி 6 தொகுதிகளிலும், அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமின் 3 தொகுதிகளிலும், கோகுல மக்கள் கட்சி, மருது சேனை சங்கம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, மக்கள் அரசு கட்சி ஆகியவை தலா 1 தொகுதியிலும் போட்டியிட்டன.

    டிடிவி தினகரன்


    இந்நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. மேலும பல சுயேட்சை வேட்பாளர்கள் களம் கண்டனர். தமிழகத்தைப் பொறுத்தவரை 5 முணைப் போட்டி உள்ளது. இதில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற கருத்துக் கணிப்பு இன்று மலை 7 மணிக்கு வெளியாக இருக்கின்ற.

    சீமான்


    தமிழகத்தைப் போலவே, 30 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கே 81.64 சதவீத வாக்குகள் பதிவாயின. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மறுபுறம் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில், பாஜக, அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

    வாக்காளர்கள்


    புதுச்சேரியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. அதேபோல, என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

    Must Read : தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

     

    தமிழக அரசியலில் களத்தில் பெரும் ஆளுமைகாளாத் திகழ்ந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறைந்த பின்னர் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால், மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் தேர்தலாக 2021 சட்டமன்ற தேர்தல் அமைந்துள்ளது. எனவே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Suresh V
    First published: