தமிழகத்தில் 160 முதல் 170 இடங்களை கைப்பற்றி திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களில் ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அசாமில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற நிலையில், மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக நடந்தது. அதில், கடைசி கட்டத் தேர்தல் இன்று நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் மாலை இறுதிகட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்னர், இரவு 7 மணி முதல் தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகளை வெளியிடலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
தொடர்ந்து, மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக - தேமுதிக, நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டியாக பார்க்கப்பட்டாலும். இதில் அதிமுக - திமுக இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் ஒருவரே மகுடம் சூடுவதற்கான வாய்ப்பு உள்ளது என பரவலாக கூறப்பட்டது. இதனிடையே, தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று பெரும்பாலான செய்தி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், அரசியல் வியூக நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் ரிபப்ளிக் டிவி தகவல் தெரிவித்துள்ளது.
ரிபப்ளிக் டிவியின் கருத்துகணிப்பின் படி, அதிமுக கூட்டணி 58 முதல் 68 இடங்களில் வெல்லும் என்றும், திமுக கூட்டணி 160 முதல் 170 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், அமமுக கூட்டணி 4 முதல் 6 இடங்களை கைப்பற்றும் என்றும், மக்கள் நீதி மய்யம் 0 முதல் 2 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.