• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Exit Poll 2021 Results: தி.மு.க கூட்டணி 195 தொகுதிகளில் வெற்றி பெறும் - இந்தியா டுடே கணிப்பு

Exit Poll 2021 Results: தி.மு.க கூட்டணி 195 தொகுதிகளில் வெற்றி பெறும் - இந்தியா டுடே கணிப்பு

 திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின்

இந்தியா டுடே - ஆக்ஸிஸ் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தி.மு.க 175 - 195 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுமுடிந்துள்ளது. அதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. அசாமில் 3 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் உட்சபட்சமாக 8 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இன்று மேற்கு வங்கத்தில் நடைபெற்ற 8-ம் வாக்குப் பதிவு முடிவு பெற்றவுடன், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளிவரத் தொடங்கின. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பிலும் தி.மு.கவே பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி தி.மு.க ஆட்சியமைக்கும் என்று கணித்திருந்தது.

    தற்போது, வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பிலும் தி.மு.க கூட்டணியே வெற்றிபெறும் என்று அனைத்து நிறுவனங்களும் கணித்துள்ளன. இந்தியா டுடே - ஆக்ஸிஸ் வெளியிட்டுள்ள கணிப்பில், தி.மு.க கூட்டணி 175 - 195 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க கூட்டணி 38 - 54 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க கூட்டணி 48 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும், அ.தி.மு.க கூட்டணி 35 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அ.ம.மு.க கூட்டணி 4 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 34,187 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு 150 பேரிடம் கேட்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே நிறுவனம் தெரிவித்துள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: