Exit Poll 2021 Results: அ.தி.மு.க கோட்டையான கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றும் தி.மு.க - ஏ.பி.பி - சிவோட்டர் கணிப்பு

Exit Poll 2021 Results: அ.தி.மு.க கோட்டையான கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றும் தி.மு.க - ஏ.பி.பி - சிவோட்டர் கணிப்பு

மு.க.ஸ்டாலின்

கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் மேற்கு மண்டலத்தில் தி.மு.க அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று ஏ.பி.பி - சிவோட்டர் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

  • Share this:
    இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுமுடிந்துள்ளது. அதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. அசாமில் 3 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் உட்சபட்சமாக 8 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இன்று மேற்கு வங்கத்தில் நடைபெற்ற 8-ம் வாக்குப் பதிவு முடிவு பெற்றவுடன், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளிவரத் தொடங்கின. தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் குறித்து வெளிவரும் கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தி.மு.கவுக்கு சாதகமாக உள்ளன.

    ஏ.பி.பி - சிவோட்டர் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தி.மு.க கூட்டணி 170 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க கூட்டணி 58-70 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏ.பி.பி - சிவோட்டர் பகுதிவாரியாகவும் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களைக் கொண்ட மேற்கு மாவட்டங்களில் 52 சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன.

    பாரம்பரியாக கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க கூட்டணி அதிக வெற்றிகளைப் பெற்றுவந்தது. ஆனால், இந்த முறை தி.மு.க கூட்டணி அதிக தொகுதிகளைப் பெறும் என்று ஏ.பி.பி கணித்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 52 தொகுதிகளில் 33-35 தொகுதிகளைக் தி.மு.க கைப்பற்றும் என்று கணித்துள்ளது. அ.தி.மு.க கூட்டணி 15 - 17 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளில் 24 தொகுதிகள் வரை அ.தி.மு.க இழக்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: