Exit Poll 2021 Results: தி.மு.க கூட்டணி 170 தொகுதிகளில் வெற்றி பெறும் - ஏ.பி.பி- சிவோட்டர் கணிப்பு

மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் தி.மு.க கூட்டணி 160 - 172 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று ஏ.பி.பி- சிவோட்டர் கணித்துள்ளது.

  • Share this:
    இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுமுடிந்துள்ளது. அதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. அசாமில் 3 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் உட்சபட்சமாக 8 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

    தமிழகத்தில் 71.79 சதவீத வாக்குப் பதிவாகின. செய்தி நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் அனைத்து ஊடகங்களின் கருத்துக் கணிப்பு தி.மு.க கூட்டணி 170 கூட்டணிகள் வரை வெற்றி பெறும் என்று கணித்திருந்தன. இந்தநிலையில் எட்டாம் கட்ட வாக்குப் பதிவு நிறைவு பெற்றநிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. ஏ.பி.பி - சி வோட்டர் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.

    அதன்படி, தி.மு.க கூட்டணி 160 - 172 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க கூட்டணி 58- 70 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் 2 தொகுதிகள் வரையும், அ.ம.மு.க கூட்டணியும் 2 தொகுதிகள் வரையும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மற்றவை 3 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published: