Exclusive : கியா மோட்டர்ஸ், கைடெக்ஸ் தமிழகத்திற்கு வராததற்கு காரணம் என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

அமைச்சர் தங்கம் தென்னரசு

கியா மோட்டார்ஸ் பிரச்சினையும், ஹைடெக்ஸ் நிறுவன பிரச்சனையையும் ஒப்பிடுவதே தவறு. 

  • Share this:
கியா மோட்டா்ஸ் இங்கே வராததையும் கைடெக்ஸ் இங்கே வராததையும் ஒப்பிடுவதே முற்றுலுமாக தவறு என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கியா மோட்டார் நிறுவனம் இங்கே வராததற்கான காரணங்களே வேறு. கியா மோட்டரிடம் என்ன பேசப்பட்டது, எதிர்பார்க்கப்பட்டது, என்ன காரணத்தினால் அவர்கள் வெளியாறினார்கள் என்பதெல்லாம் ஊரறிந்த உண்மை.

இதுதவிர  கைடெக்ஸ் முற்றிலுமாக வெளியேறவில்லை. அவர்கள் நாம் வழங்கிய சலுகைகளை நிராகரிக்கவில்லை. தமிழ்நாடு ஆர்வம் காட்டாததால் என்று கேள்வி கேட்கிறீர்கள். அது தவறு. கேரளாவைவிட்டு வேறு மாநிலத்தில் முதலீடு செய்ய விரும்புகிறோம் என்று அவர்கள் சொன்னவுடன், நானும் தொழில்துறை செயலரும் அவர்களிடம் பேசினோம். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்தால் அவர்களுக்கு என்னென்ன சலுகைகளை கொடுக்க தயாராக இருக்கிறோம் என்பதையெல்லாம் விரிவாகச் சொன்னோம்.

Also Read : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது... 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்கட் கிழமை வெளியாகிறதா?

கியா மோட்டார்ஸ் பிரச்சினையும், ஹைடெக்ஸ் நிறுவன பிரச்சனையையும் ஒப்பிடுவதே தவறு.  இந்த அரசைப் பொருத்தவரை வெளிப்படைத்தன்மையாக இருக்கிறோம். தொடர்ச்சியாக ஹைடெக்ஸ் நிறுவனத்திடம் பேசிக்கொண்டிருக்கிறோம் நல்ல முடிவுகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

தமிழ்நாடு என்பது தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கான சிறந்த இடமாக தமிழகத்தை மாற்றுவதுதான் எங்கள் திட்டம், அதை நோக்கி முதலீடுகளை ஈர்க்கவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டங்களை உருவாக்கி இருக்கிறோம்.
எந்தந்த இடங்களில் எந்த மாதிரியான திட்டங்கள் செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆராய்ந்து வைத்திருக்கிறோம்.

எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மிகப் பெரிய அளவில் வரப்போகிறது. இது தவிர, செமி கண்டக்டர்கள், லித்தியம் பேட்டரிகள், உணவு பதப்படுத்தும் தொழில்கள், உயிரி தொழில்நுட்பம், நுண்கடன்கள் போன்றவற்றை செயல்படுத்துவதற்கான திட்டங்கள் தயார் செய்யப்படுகின்றன. கடந்த திமுக ஆட்சியில் தூத்துக்குடி , மதுரையில்  தொழில் பெருவெளிகள் உருவாக்கப்பட்டது. அதில் பல தொழில் நிறுவனங்களை உருவாக்காமல் அதற்குப் பிறகு அதை கிடப்பில் போட்டுவிட்டது கடந்த அதிமுக ஆட்சி.

Also Read : திருக்குறள்களை தலைகீழாக எழுதி உலக சாதனை நிகழ்த்திய  கார் ஓட்டுநர்!

தற்போது மீண்டும் அதற்கு உயிரூட்டி பல  புதிய திட்டங்கள் வருவதற்காக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம் சென்னை கன்னியாகுமரி வழித்தடங்களில் சிப்காட் மூலமாக நிறைய தொழில்களை உருவாக்க முயன்று வருகிறோம்.
தமிழகத்தின் ஒட்டுமொத்தமாக தொழில் வளர்ச்சியை  உருவாக்குவதற்கும் அதில் உரிய பங்கினை தென் மாவட்டத்திற்கு பெறுவதற்கான முயற்சியில் இந்த அரசாங்கம் மேற்கொள்ளும்.

தற்போது மீண்டும் அதற்கு உயிரூட்டி பல  புதிய திட்டங்கள் வருவதற்காக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம் சென்னை கன்னியாகுமரி வழித்தடங்களில் சிப்காட் மூலமாக நிறைய தொழில்களை உருவாக்க முயன்று வருகிறோம்.
தமிழகத்தின் ஒட்டுமொத்தமாக தொழில் வளர்ச்சியை  உருவாக்குவதற்கும் அதில் உரிய பங்கினை தென் மாவட்டத்திற்கு பெறுவதற்கான முயற்சியில் இந்த அரசாங்கம் மேற்கொள்ளும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: