அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை என்றும், ஒற்றைத் தலைமைக்கு வர கே.பி.முனுசாமி முயற்சி மேற்கொண்டதாகவும் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் பேசியதாக ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் கோலப்பனுடன் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக ஓ.பி.எஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.
எடப்பாடி பழனிசாமி குறித்து தான் பேசியதுபோன்று வெளியான ஆடியோ, தான் பேசியது இல்லை என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் விளக்கம் அளித்திருந்தார். அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் தனது குரல் போன்றே மிமிக்ரி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்
இந்நிலையில் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகி கோலப்பன் நியூஸ்18 தமிழ்நாடுக்கு அளித்த நேர்காணலில், என்னுடன் பேசி வெளியான ஆடியோவில் இருப்பது பொன்னையன் குரல் தான். கடந்த 9-ம் தேதி பொன்னையனுடன் நான் பேசினேன். ஆடியோவில் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் பொன்னையனுடயது தான். பொன்னையனை அவமானப்படுத்தவேண்டும் என்பதற்காக ஆடியோவை பதிவு செய்யவில்லை. ஈபிஎஸ்-ஐ 100 சதவீதம் தொண்டர்கள் ஏற்கவில்லை என பொன்னையன் கூறினார். ஆடியோ குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறவில்லை. ” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Edappadi palanisamy, EPS, Kanyakumari, O Panneerselvam, OPS - EPS, Phone audio, Politics, Ponnaiyan