வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது ஜனநாயகப் படுகொலை என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியிலுள்ள தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது கல்லூரிகளில் கடந்த மாதம் 29-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, துரை முருகன் வீட்டிலிருந்து 10 லட்ச ரூபாய் கைப்பற்றினர். பின்னர், இரு தினங்கள் கழித்து ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்ற சோதனையில், துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க பிரமுகர் சீனிவாசன் வீடு மற்றும் அவரின் சிமென்ட் குடோனுக்குள் மூட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பணம் கட்டுக்கட்டாக சிக்கின. 10 கோடி ரூபாய் வரை பணம் சிக்கியதாக கூறப்பட்டது.
READ ALSO: “வந்தார்கள்... இல்லையென்றார்கள்... சென்றார்கள்...” ஐ.டி ரெய்டு குறித்து துரை முருகன் கருத்து
வேலூர் மாவட்ட மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்வதற்கு தமிழக தேர்தல் ஆணையம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. வேலூர் மாவட்டத்துக்கு மட்டும் தேர்தலை ஒத்திவைப்பதற்கான பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்தது.
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு தற்போது, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்அடிப்படையில், வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
READ ALSO: “தேமுதிகவை தொட்டவர்களின் வரலாறு இதுதான்” துரை முருகன் வீட்டில் ரெய்டு குறித்து பிரேமலதா கருத்து
வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக துரைமுருகன் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. வேலூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதற்கான ஆதரம் உள்ளதா என்றார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் மகன் போட்டியிடும் தேனி தொகுதியிலும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அங்கும் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
Also Watch:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.