Home /News /tamil-nadu /

ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையில் என்ன இருக்கிறது? ஆறுமுகசாமி எக்ஸ்கிளூசிவ் பேட்டி

ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையில் என்ன இருக்கிறது? ஆறுமுகசாமி எக்ஸ்கிளூசிவ் பேட்டி

முன்னாள் நீதியரசர் ஆறுமுகச்சாமி

முன்னாள் நீதியரசர் ஆறுமுகச்சாமி

Arumugasamy Commission : சொல்ல வேண்டிய அனைத்தையும் அறிக்கையில் சொல்லி விட்டேன். எதையும் விட்டு வைக்கவில்லை. என் மனதில் பட்ட அனைத்தையும் அறிக்கையில் நான் கூறிவிட்டேன். – முன்னாள் நீதியரசர் ஆறுமுகச்சாமி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில்  2017 செப்டம்பர் மாதம் விசாரணை அமைக்கப்பட்டது. மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட நிலையில், 14 முறை ஆணையத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு, 158 பேரிடம் ஆணையம் தனது விசாரணையை நிறைவு செய்திருக்கிறது.

    ஆணையம் சார்பாக 151 பேரிடமும், தங்களை விசாரிக்க வேண்டும் என்று மனு செய்த 7 பேரிடம் ஆணையம் விசாரணையை நடத்தியது. இந்நிலையில் விசாரணை அறிக்கை இன்று தலைமை செயலகத்தில் முதல்வரிடம் அளிக்கப்பட்டது. விசாரணை அறிக்கை குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு முன்னாள் நீதியரசர் ஆறுமுகச்சாமி அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது-

    ஆங்கிலத்தில் 500 பக்கமும், தமிழில் 608 பக்கமும் கொண்டதாக அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. அளிக்கப்பட்ட சாட்சியங்கள் 2 வால்யூம்களாகவும் சாட்சியத்தின் சுருக்கமான பதிவு ஒரு வால்யூம் ஆகவும், மொத்தம் 3 வால்யூமாக அறிக்கை அமைக்கப்பட்டுள்ளது.

    ஜெயலலிதா மரணம் : 608 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல் செய்தது ஆறுமுகசாமி ஆணையம்

    ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் எனது அறிக்கை இருக்கும். இந்த அறிக்கை பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிக்கை அதிகாரப்பூர்வமாக, அரசு வெளியிட்ட பின்னர் தான் தெரிய வரும். எய்ம்ஸ் அறிக்கை வெளியான பின்னர், அந்த அறிக்கை குறித்து கூடுதலாக 30 பக்கங்கள் எழுதினேன். அதனை ஆய்வு செய்து அறிக்கை எழுதப்பட்டது. அதுவும் எங்களுடைய பணி தானே.



    ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகி நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்தார். சசிகலா அவர்கள் நேரில் ஆஜராகவில்லை. அவரை நான் கட்டாயப்படுத்த விரும்பவில்லை.

    அறிக்கையில் என்னுடைய கருத்துக்களை குறைவானதாக இருக்கும். சாட்சியங்கள் ஆவணங்கள் அடிப்படையில் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. விசாரணை கமிஷன் குறித்து சிலர் விமர்சனங்களை செய்துள்ளனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும், அவர்களுடைய கருத்துக்களை பதிவு செய்யலாம். நான் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    நான் எனக்கு வழங்கப்பட்ட காலத்திற்குள், எனது பணியை சிறப்பாக செய்து விட்டேன் என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது. அதுவே எனக்கு போதுமானதாக கருதுகிறேன். ஜெயலலிதா சிகிச்சையில் 3-வது நபரின் தலையீடு ஏதும் இருந்ததா என்று கேட்கிறீர்கள்.

    சசிகலாவை கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற விரும்பவில்லை - ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி

    இதுகுறித்த பதில் அறிக்கையில் உள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கை விவாதிக்கப்படும் என்று கூறுகிறீர்கள். உண்மையிலேயே இந்த அரசு ஜெயலலிதா மரணம் குறித்த விவகாரத்தில் வேகமாக செயல்படுகிறது. இதைவிட விரைவாக நடவடிக்கை எடுக்க முடியாது என்று கருதுகிறேன். சொல்ல வேண்டிய அனைத்தையும் அறிக்கையில் சொல்லி விட்டேன். எதையும் விட்டு வைக்கவில்லை. என் மனதில் பட்ட அனைத்தையும் அறிக்கையில் நான் கூறிவிட்டேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
    Published by:Musthak
    First published:

    Tags: Arumugasamy commission, Jayalalitha

    அடுத்த செய்தி