'மோடி - அம்பேத்கர் குறித்த கருத்தை திரும்பப்பெற மாட்டேன்' என்று இசைஞானி இளையராஜா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முன்னுரையாக இளையராஜா எழுதியது சர்ச்சையை கிளப்பி வருகிறது.இளையராஜா தனது முன்னுரையில், 'பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
சமூக நீதி தொடர்பாக பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்.
அம்பேத்கரையும், மோடியையும் குறிப்பிட்டிருந்த இளையராஜாவின் கருத்து கடும் விமர்சனங்களை உருவாக்கி வருகிறது. இதில் பல்வேறு தரப்பினர் இளையராஜாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இளையராஜா தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுததி வருகின்றனர்.அதேநேரம், பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் இளையராஜாவின் கருத்தை ஆதரித்துள்ளார்கள். இசைஞானியின் கருத்து, தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இதுபற்றி இளையராஜா தனது சகோதரர் கங்கை அமரனிடம், 'நான் படத்தில் போட்ட டியூனையும் நல்லா இல்லை என்று சொன்னால் திரும்ப வாங்க மாட்டேன். என் மனதில் என்ன உள்ளதோ, உண்மையை சொல்வதற்கு தயங்க மாட்டேன்.
மற்றவர்களுடைய கருத்து வேறுமாதிரியாக இருக்கலாம். இது என்னுடைய கருத்து. மற்றவர்கள் கருத்து எனக்கு பிடிக்காவிட்டாலும், அது பிடிக்கவில்லை என்று நான் சொல்ல மாட்டேன். நான் கூறியதை அரசியலாக்க விரும்பவில்லை. மோடிக்கு ஓட்டுப் போடுங்கள் என்றும் சொல்ல மாட்டேன். ஓட்டுப் போடாதீர்கள் என்றும் சொல்ல மாட்டேன்.' என்று கூறியுள்ளார். இந்த தகவலை நியூஸ் 18-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கங்கை அமரன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.