Home /News /tamil-nadu /

Exclusive : ''சசிகலா அதிமுகவிற்குள் வந்தால் ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் டம்மி ஆகி விடுவார்கள்'' : ஓ.ராஜா பேட்டி

Exclusive : ''சசிகலா அதிமுகவிற்குள் வந்தால் ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் டம்மி ஆகி விடுவார்கள்'' : ஓ.ராஜா பேட்டி

ஓபிஎஸ்-இபிஎஸ்

ஓபிஎஸ்-இபிஎஸ்

சசிகலா தலைமையேற்க வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் எதிர்பார்ப்பு. 95 சதவீத தொண்டர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள். - ஓ. ராஜா

    சசிகலா அதிமுகவிற்குள் வந்தால் ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் டம்மி ஆகி விடுவார்கள் என்று அக்கட்சியில் இருந்து இன்று வெளியேற்றப்பட்டவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பியுமான ஓ.ராஜா கூறியுள்ளார்.

    அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை சேர்க்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அதிமுக மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் சசிகலாவை சந்தித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, கட்சியில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு ஓ.ராஜா அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது-

    சசிகலா இல்லாமல் அதிமுகவை பன்னீர் செல்வமும் பழனிசாமியும் வளர்த்திருந்தார்கள் என்றால் அவர்களை பாராட்டலாம். ஆனால் அவர்கள் அதிமுகவை அழித்து விட்டார்கள். இருவரும் இரட்டை குழல் துப்பாக்கி அல்ல; தீபாவளி துப்பாக்கிதான்.

    இதையும் படிங்க - மேகேதாட்டு அணைக்கு ரூ.1000 கோடி: கர்நாடக திட்டத்தை முறியடிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

    எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர் செல்வம் இடையிலான பிரச்னைகளை தீர்ப்பதற்குத்தான் நேரம் போதுமானதாக உள்ளது. அதிமுக யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. ஓபிஎஸ் ஒரு கோஷ்டியையும், எடப்பாடி பழனிசாமி ஒரு கோஷ்டியையும் வைத்துள்ளனர். 33 ஆண்டுகளாக கட்சியை கட்டிக் காப்பாற்றியவர் சசிகலா.

    ஜெயலலிதா அளித்த ஆட்சியை இந்த இருவரால் தக்க வைத்துக்கொள்ள முடிந்ததா? இருவரும் கட்சியை காலி செய்யப் போகிறார்கள். தொண்டர்கள் சுதாரித்துக் கொண்டு ஓ பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவுக்கு தேவையில்லை என்று சொல்ல வேண்டும். அப்போதுதான் கட்சி நல்லா இருக்கும்.

    இதையும் படிங்க - சசிகலாவுடன் சந்திப்பு... தம்பி ராஜாவை அதிமுகவிலிருந்து நீக்கினார் ஓ.பன்னீர் செல்வம்

    சசிகலா தலைமையேற்க வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் எதிர்பார்ப்பு. 95 சதவீத தொண்டர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள். சசிகலா கட்சிக்குள் வந்தால் ஓபிஎஸ்சும், எடப்பாடி பழனிசாமியும் டம்மி ஆகிவிடுவார்கள். எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றுதான் சசிகலா கூறுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
    Published by:Musthak
    First published:

    Tags: ADMK

    அடுத்த செய்தி