Home /News /tamil-nadu /

Exclusive : 'மேதாவித்தனத்தை காட்ட முயற்சிக்கிறார்கள்' : சினிமா ரிவியூவர்களை விளாசும் 'அண்ணாத்த' சிவா

Exclusive : 'மேதாவித்தனத்தை காட்ட முயற்சிக்கிறார்கள்' : சினிமா ரிவியூவர்களை விளாசும் 'அண்ணாத்த' சிவா

ஜனங்களுக்கு பிடித்து, எல்லோரும் நல்லா இருக்கு என்று சொல்கிற படத்தை, நாமும் நல்லா இருக்குன்னு சொல்லி விட்டால் நமக்கு அறிவு குறைவாக இருக்கிறதோ என்று அவர்கள் (சினிமா ரிவியூவர்கள்) நினைக்கின்றனர்

ஜனங்களுக்கு பிடித்து, எல்லோரும் நல்லா இருக்கு என்று சொல்கிற படத்தை, நாமும் நல்லா இருக்குன்னு சொல்லி விட்டால் நமக்கு அறிவு குறைவாக இருக்கிறதோ என்று அவர்கள் (சினிமா ரிவியூவர்கள்) நினைக்கின்றனர்

ஜனங்களுக்கு பிடித்து, எல்லோரும் நல்லா இருக்கு என்று சொல்கிற படத்தை, நாமும் நல்லா இருக்குன்னு சொல்லி விட்டால் நமக்கு அறிவு குறைவாக இருக்கிறதோ என்று அவர்கள் (சினிமா ரிவியூவர்கள்) நினைக்கின்றனர்

  • 2 minute read
  • Last Updated :
விமர்சனம் என்ற பெயரில் தங்களது மேதாவித்தனத்தை காட்ட முயற்சிக்கின்றனர் என்று, நெகடிவ் சினிமா ரிவியூவர்களை இயக்குனர் சிவா விமர்சித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இருப்பினும், படம் குறித்து கலவை விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன.

குடும்ப உறவுகளின் மதிப்பை அழகாகச் சொல்லி ரசிகர்களின் மனதை இயக்குனர் சிவா கொள்ளையடித்துள்ளார்; ரஜினியை மிக அழகாக, ஸ்டைலிஷாக சிவா காட்டியுள்ளார் என்று பாசிடிவான விமர்சனங்கள் வந்துள்ளன. அதேபோன்று, இதுவரை அவர் எடுத்த அனைத்து படங்களையும் கூடவே ரஜினியையும் சேர்த்து அண்ணாத்தவில் பார்த்து விடலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு இயக்குனர் சிவா பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

உலகத்தில் உண்மை, நேர்மை, அழகு என எவ்வளவோ பாசிட்டிவான விஷயங்கள் இருக்கின்றன. அதேபோன்று நெகட்டிவ் விஷயங்களும் இருக்கத்தான் செய்யும். அதை கவனிக்கவோ, கண்டு கொள்ளவோ கூடாது என்பதில் நான் முடிவாக உள்ளேன். நான் திரைப்பட விமர்சனங்களை ஒருபோதும் பார்ப்பதில்லை. படைப்பாளிகளுக்கும் அதனைப் பார்க்கக் கூடிய ரசிகர்களுக்கும் இடையே நேரடி கனெக்சன் இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன்.

இடையில் ஒருவர் வரும்போது அவருடைய எண்ணங்கள், அவர்களுடைய பார்வைகள் அந்த படைப்பின் மீது பட்டு ரசிகர்களுக்கு செல்கிறது. இது சரியானது அல்ல. நான் ஒரு படம் பார்க்கிறேன் என்றால் நேரடியாக படத்தை பார்ப்பேன். பிடித்திருந்தால் மகிழ்ச்சி; பிடிக்காவிட்டால் அடுத்ததாக அந்த இயக்குனர் நல்ல படத்தைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் செல்வேன். நான் ஒருபோதும் ரிவ்யூஸ் பார்த்து படம் பார்ப்பதில்லை.

என்னுடைய எல்லா படத்திற்கும் தனிமனித தாக்குதல்கள் இருக்கும். நெகட்டிவான விமர்சனங்கள் இருக்கும். நெகட்டிவிட்டி, தவறான விமர்சனங்கள், தனிமனித தாக்குதல்கள், அதன் பின்னர் இருக்கும் பணபலம் உள்ளிட்டவை ஒருபக்கம்; உண்மையான உழைப்பு, நேர்மையான ஒரு டீம், இறைவன் அருள் இதெல்லாம் ஒரு பக்கம். எது ஜெயிக்கும் என்று ஒவ்வொரு முறையும் ரசிகர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.



ரசிகர்களின் விமர்சனங்களுக்கு நான் தலை வணங்குகிறேன். 700 பேர் படம் பார்க்கிறார்கள் என்றால் அதில் 500 பேருக்கு படம் பிடிக்கலாம், 200 பேருக்கு பிடிக்காமலும் போகலாம். அது அவர்களுடைய கருத்து. சினிமா விமர்சனம் செய்யும் ரிவியூவர்கள் மனசில் ஒரு விதமான மனநிலை காணப்படுகிறது.

ஜனங்களுக்கு பிடித்து, எல்லோரும் நல்லா இருக்கு என்று சொல்கிற படத்தை, நாமும் நல்லா இருக்குன்னு சொல்லி விட்டால் நமக்கு அறிவு குறைவாக இருக்கிறதோ என்று அவர்கள் (சினிமா ரிவியூவர்கள்) நினைக்கின்றனர். இதனால் தங்கள் மேதாவித்தனத்தை காட்டும் முயற்சியாக அவர்கள் நெகட்டிவான விமர்சனங்களை வைக்கின்றனர்.

பொதுமக்களுக்கும், ஃபேமிலி ஆடியன்சுக்கும் அவர்கள் மனது கனிந்து, சந்தோஷமாக சிரித்து, எந்தவிதமான ஆபாசம் இல்லாத நல்ல படங்களை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதனை தொடர்ந்து செய்வேன்.
இவ்வாறு இயக்குனர் சிவா கூறியுள்ளார்.
First published:

அடுத்த செய்தி