Home /News /tamil-nadu /

Exclusive : ''சசிகலா தலைமையேற்க வேண்டும் என்பதுதான் அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு'' : ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா பேட்டி

Exclusive : ''சசிகலா தலைமையேற்க வேண்டும் என்பதுதான் அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு'' : ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா பேட்டி

தொண்டர்கள்  சுதாரித்துக் கொண்டு ஓ பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவுக்கு தேவையில்லை என்று சொல்ல வேண்டும்.  - ஓ. ராஜா

தொண்டர்கள் சுதாரித்துக் கொண்டு ஓ பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவுக்கு தேவையில்லை என்று சொல்ல வேண்டும். - ஓ. ராஜா

தொண்டர்கள் சுதாரித்துக் கொண்டு ஓ பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவுக்கு தேவையில்லை என்று சொல்ல வேண்டும். - ஓ. ராஜா

    சசிகலா தலைமையேற்க வேண்டும் என்பதுதான் அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு என்று அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பியுமான ஓ.ராஜா கூறியுள்ளார்.

    அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை சேர்க்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அதிமுக மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் சசிகலாவை சந்தித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, கட்சியில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு ஓ.ராஜா அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது-

    அதிமுக யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. ஓபிஎஸ் ஒரு கோஷ்டியையும், எடப்பாடி பழனிசாமி ஒரு கோஷ்டியையும் வைத்துள்ளனர். 33 ஆண்டுகளாக கட்சியை கட்டிக் காப்பாற்றியவர் சசிகலா.

    இதையும் படிங்க - Exclusive : ''சசிகலாவின் வருகை மட்டுமே அதிமுகவை காப்பாற்றும்'' : ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா பேட்டி

    ஜெயலலிதா அளித்த ஆட்சியை ஓ. பன்னீர் செல்வத்தாலும், எடப்பாடி பழனிசாமியாலும் தக்க வைத்துக்கொள்ள முடிந்ததா? இருவரும் கட்சியை காலி செய்யப் போகிறார்கள். தொண்டர்கள் சுதாரித்துக் கொண்டு ஓ பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவுக்கு தேவையில்லை என்று சொல்ல வேண்டும். அப்போதுதான் கட்சி நல்லா இருக்கும்.

    சசிகலா தலைமையேற்க வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் எதிர்பார்ப்பு. 95 சதவீத தொண்டர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள். சசிகலா கட்சிக்குள் வந்தால் ஓபிஎஸ்சும், எடப்பாடி பழனிசாமியும் டம்மி ஆகிவிடுவார்கள். எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றுதான் சசிகலா கூறுகிறார்.

    எம்ஜியாரும், ஜெயலலிதாவும் உருவாக்கி வளர்த்த அதிமுகவை ஓ பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எளிதாக அழித்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் அதிமுக தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதற்கு இந்த இருவரும்தான் காரணம். கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்க்கப்படுவார்கள் என்று தீர்மானம் போட்டு விட்டு ஏன் பின் வாங்குகிறார்கள்?

    இதையும் படிங்க - சசிகலாவுடன் சந்திப்பு... தம்பி ராஜாவை அதிமுகவிலிருந்து நீக்கினார் ஓ.பன்னீர் செல்வம்

    கொஞ்ச நாட்களில் ஓபிஎஸ்சையும், இபிஎஸ்சையும் தொண்டர்களே புறக்கணித்து விடுவார்கள். இன்னும் 10 நாட்களில் சசிகலா தலைமைதான் வேண்டும் என்று தொண்டர்கள் குரல் எழுப்ப ஆரம்பித்து விடுவார்கள். நீங்கள் எடுத்ததுதான் சரியான முடிவு என்று என்னிடம் ஒரு லட்சம் பேர் பேசியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
    Published by:Musthak
    First published:

    Tags: ADMK

    அடுத்த செய்தி