ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

12 அடி குழிக்குள் 9 நாட்கள் தவம் இருக்கப்போவதாக கூறி இறங்கிய சாமியாரால் பரபரப்பு..

12 அடி குழிக்குள் 9 நாட்கள் தவம் இருக்கப்போவதாக கூறி இறங்கிய சாமியாரால் பரபரப்பு..

தேனியில் சாமியாரால் பரபரப்பு

தேனியில் சாமியாரால் பரபரப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 12 அடி ஆழ குழிக்குள் 9 நாட்கள் தவம் இருக்க போவதாக கூறி குழிக்குள் இறங்கிய சாமியாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மொட்டனூத்து ஊராட்சி, நாகுலகவுண்டன்பட்டியில்   உள்ள தனியார் தோட்டத்தில் சாமியார் ஒருவர் பூமிக்கு அடியில் ஒன்பது நாட்கள் தவம் இருப்பதாக கூறி, 12 அடி ஆழக் குழிக்குள் இறங்கி அமர்ந்து பூஜை, ஜீவசமாதி என பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆண்டிபட்டி அருகே உள்ள மொட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் என்கிற சொக்கநாதர். இவர் தனது 13 வயதிலேயே ஊரைவிட்டுச் காசிக்கு சென்று ம் தீட்சை பெற்று அகோரி முனிவராக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு தனது சொந்த ஊரான மொட்டனூத்துக்கு வந்துள்ளார். இந்நிலையில் சிவபெருமானின் உத்தரவின் பேரில் பூமி வேள்வி பூஜை நடத்த, 12 அடி ஆழ குழிக்குள் இறங்க போவதாக கூறியுள்ளார்அதோடு குழியின் மேலே சிமெண்ட் சிலாப்புகள் வைத்து மூடிவிடும்படியும் கூறிவிட்டு குழிக்குள் இறங்கியுள்ளார். இந்நிலையில் சாமியார் சொக்கநாதர் ஜீவ சமாதி அடைய உள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் படிக்க..மகளின் திருமணம் என காரணம் கூறி ரூ.1 கோடி கடன் வசூல் மோசடி.. பாதிக்கப்பட்டவர் தீக்குளிப்பு முயற்சி.. நடந்தது என்ன?

இது குறித்து தகவல் அறிந்த ராஜதானி போலீசார் சொக்கநாதரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சொக்கநாதர் பகிர்ந்த தகவல்கள் அதிர்ச்சி ரகம். அவர் கடந்த 24 ஆண்டுகளாக உணவு உண்ணாமல் வாழ்ந்து வருகிறாராம். மேலும் நீர் அருந்தாமலும் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். அதோடு உலக நலனுக்காக தான் இந்த வேள்வியை நடத்த உள்ளதாகவும், தான் ஜீவ சமாதி அடையவில்லை என்றும் கூறினார். ஆனால் இதற்கு அனுமதி இல்லை என போலீசார் கூறியதால் அவர் 2 மணிநேரத்திற்கு பின் குழிக்குள் இருந்து மேலே வந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பக்தர்களின் வருகை அதிகமாக இருப்பதாலும் மீண்டும் சாமியார் குழிக்குள் இறங்கிவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்

First published:

Tags: Theni