முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "சிறுமி டான்யாவுடன் புன்னகையைப் பரிமாறிக் கொண்டேன்" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

"சிறுமி டான்யாவுடன் புன்னகையைப் பரிமாறிக் கொண்டேன்" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

சிறுமி டான்யாவை சந்தித்த முதல்வர்

சிறுமி டான்யாவை சந்தித்த முதல்வர்

MKStalin : சிறுமி டான்யாவை அன்புடன் நலம் விசாரித்து, புன்னகையைப் பரிமாறிக் கொண்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யாவுக்கு சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் சிறுமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி டான்யா, அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதும் குறித்தும், அவரது வேதனைகள் குறித்தும், கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி நியூஸ் 18 தமிழ்நாடு சிறப்பு செய்தியாக வெளியிட்டது. அதன் எதிரொலியாக அரசு மருத்துவ குழுவினர் சிறுமியை பரிசோதித்த பிறகு தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி சிறுமிக்கு 9 மணி நேர உடல் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு, சிறுமியின் தாயாரை முதலமைச்சர் ஸ்டாலின் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

மேலும், சிறுமியை நேரில் வந்து பார்ப்பதாகவும் அவர் உறுதியளித்திருந்தார். அதன்படி, நேற்று அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு, சவீதா மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், சிறுமி டானியாவை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். அவருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர், சிறுமி விரைந்து நலம் பெற வாழ்த்தினார்.

சிறுமி டானியாவை சந்தித்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுமியிடம் அன்புடன் நலம் விசாரித்து, புன்னகையைப் பரிமாறிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். வலுவான நம்முடைய மருத்துவக் கட்டமைப்பால், இது சாத்தியமாகியுள்ளது என்றும் நம் மருத்துவக் கட்டமைப்பைக் காத்து, புன்னகைகளைப் பரிசாகப் பெறுவோம் எனவும் கூறியுள்ளார்.

First published:

Tags: Chennai, MK Stalin, Tamil News