தமிழகத்தில் 8 மாவட்டங்களை தவிர்த்து, எஞ்சிய மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்தை தொடங்கலாம்: மருத்துவர்கள் குழு பரிந்துரை

கோப்பு படம்

தமிழ்நாட்டில் ஜவுளி மற்றும் நகைக்கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதுடன், கொரோனா ஊரடங்கு வரும் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

 • Share this:
  தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர் உட்பட 8 மாவட்டங்களை தவிர, எஞ்சிய மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பொதுப் போக்குவரத்தை தொடங்கலாம் என்று, மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

  தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வருகின்ற 21-ம் தேதியுடன் முடிவடைகிறது. பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. தமைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மருத்துவ வல்லுநர்களை தொடர்ந்து முதலமைச்சர், உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து, இன்று மாலை ஊரடங்கு தளர்வுகள் குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என கூறப்படுகிறது.

  மேலும், தமிழ்நாட்டில் ஜவுளி மற்றும் நகைக்கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதுடன், கொரோனா ஊரடங்கு வரும் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

  Also read: சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட வேண்டாம்; கோவை சைபர் கிரைம் போலீஸ் பெண்களுக்கு அட்வைஸ்

  கள நிலவரங்களை ஆராய்ந்த பின்னரே ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்க வேண்டுமென மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உள்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள கடிதத்தில் தளர்வுகளின் போதும் மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் போன்ற விதிகளை மக்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

  தற்போதைய சூழலில் கொரோனாவிற்கு எதிராக உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்பதால், தகுதியானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அரசு உறுதி செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
  Published by:Esakki Raja
  First published: