• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அரசின் அனுமதிபெற்ற பிறகே கல்லூரிகள் தேர்வுகளை நடத்த வேண்டும் - உயர்கல்வித்துறை உத்தரவு

அரசின் அனுமதிபெற்ற பிறகே கல்லூரிகள் தேர்வுகளை நடத்த வேண்டும் - உயர்கல்வித்துறை உத்தரவு

கோப்புப் படம்

கோப்புப் படம்

அரசின் அனுமதி பெற்ற பிறகே கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • Share this:
உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கின்றார். அதில் பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் தேர்வுகளை நடத்துவதற்கு முன்பு அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



குறிப்பாக கடந்த மாத இறுதியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில் செமஸ்டர் தேர்வுகள் கல்லூரிகளுக்கு மாணவர்கள் நேரடியாக வந்து செல்லும் முறையில் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் தற்போது கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும் என்று அறிவித்து வருகின்றன.

Also read: கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை எவ்வளவு?

இந்நிலையில், உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் தேர்வு நடத்துவதற்கு முன்னதாக அரசின் அனுமதியைப் பெற்றே நடத்த வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: