நீட் தேர்வு எப்படி இருந்தது? தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து

நீட் தேர்வு எப்படி இருந்தது? தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து

கோப்புப் படம்

மாநில பாடத்திட்டத்தில் இருந்து 20 முதல் 30சதவிகிதம் கேள்விகள் இடம்பெற்றிருந்ததாக தெரிவித்தனர்.

  • Share this:
    நீட் தேர்வில் பெரும்பாலான கேள்விகள் சி.பி.எஸ்.இ  பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கபட்டதாக நீட் தேர்வு எழுதிய  மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    நீட் தேர்வு வழக்கமாக மே மாதத்தில் நடைபெறும். இந்த ஆண்டு  கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. மே 3 மற்றும் ஜூலை 26 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்ட தேர்வு இன்று நடைபெற்றது.

    நாடு முழுவதும் 3,842 மையங்களில் 15,97,000 பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தில் 1,17,000 மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். இதற்காக சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 14 நகரங்களில் 238 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேர்வு மைய வளாகம் மற்றும் வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

    நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே  தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.



    நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்த மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தில் இருந்து 20 முதல் 30சதவிகிதம் கேள்விகள் இடம்பெற்றிருந்ததாக தெரிவித்தனர். பெரும்பாலான கேள்விகள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கபட்டதாகவும் மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.



    மேலும் நீட் தேர்வில் தாவரவியல் உயிரியல்,வேதியியல் பாடங்கள் எளிதாக இருந்ததாகவும் இயற்பியல் பாடத்திலிருந்து கேட்கப்பட்ட கேள்விகள் மட்டும் சற்று கடினமாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர். இந்த முறை நீட் எளிதாகவே இருந்தது என பல மாணவர்கள் தங்களது தேர்வு அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
    Published by:Vijay R
    First published: