திறமைகளைத் தேர்வுகள் மட்டும் அளவிடுவதில்லை - கமல்ஹாசன்

திறமைகளைத் தேர்வுகள் மட்டும் அளவிடுவதில்லை. வாழ்க்கை உங்களுக்காய் காத்திருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திறமைகளைத் தேர்வுகள் மட்டும் அளவிடுவதில்லை - கமல்ஹாசன்
கமலஹாசன்
  • Share this:
தமிழகத்தில் மார்ச் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரையில் தமிழ்நாடு பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 12-ம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற்றது. முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

திருப்பூர் 97.12 சதவிகிதமும், ஈரோடு 96.99 சதவிகிதமும், கோவை 96.39 சதவிகிதமும் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் மொத்தமாக 92.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

 




12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில், ‘மாணவ கண்மணிகாள், பரீட்சைகளும், மதிப்பெண்களும் மட்டுமே உங்களின் அளவுகோல் அல்ல. அதிக மதிப்பெண் பெற்று மகிழ்ந்திருப்போருக்கு வாழ்த்துக்கள்.பெறாதோர் வருந்த வேண்டாம். திறமைகளை தேர்வுகள் மட்டும் அளவிடுவதில்லை. வாழ்க்கை உங்களுக்காய் காத்திருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading