தகுதித் தேர்வில் ஏற்கெனவே தேர்ச்சி பெற்றதை கருத்தில் கொள்ளாமல் மீண்டும் தேர்வு எழுதவேண்டும் என அரசாணை பிறப்பித்திருப்பது அநீதி என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, "தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக பணி நியமனத்திற்கு காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு தங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி வேலை வழங்காமல் ஏமாற்ற நினைக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேலை வாய்ப்பக முன்னுரிமையையும் (Employment Seniority) பின்பற்றாமல், தகுதித் தேர்வில் ஏற்கெனவே தேர்ச்சி பெற்றதையும் கருத்தில் கொள்ளாமல் மீண்டும் தேர்வு எழுதவேண்டும் என அரசாணை பிறப்பித்திருப்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாக அரசு ஏற்கிறதா: கல்வியாளர்கள் கேள்வி- தமிழக அரசு விளக்கம்
ஆசிரியர் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் அவர்களை இப்படி நம்பவைத்து கழுத்தறுப்பது சரியானதல்ல.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பல்வேறு நிலை ஆசிரியர் பணியிடங்களில் அவர்களை பணி அமர்த்தவேண்டும். திமுக அரசின் வஞ்சகத்தைக் கண்டித்து தொடர்ந்து நடந்துவரும் ஆசிரியர்களின் போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.