Home /News /tamil-nadu /

காஞ்சிபுரம் கலெக்டருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? கொதிக்கும் பொன்.ராதா கிருஷ்ணன்

காஞ்சிபுரம் கலெக்டருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? கொதிக்கும் பொன்.ராதா கிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்

”இந்தி பற்றி பேசுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எந்த அருகதையும் இல்லை”

  • News18
  • 2 minute read
  • Last Updated :
    அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களை வரவேண்டாம் என சொல்வதற்கு காஞ்சிபுரம் கலெக்டருக்கு யார் அதிகாரம் கொடுத்தது என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    சென்னை வியாசர்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும் போது:-

    காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஓர் முறை மக்களுக்கு தரிசனம் கொடுக்கும் அத்திவரதை தரிசக்க லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் சரியான முறையில் அங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. சாதாரண தேர் திருவிழாவில் உள்ள ஏற்பாடுகள் கூட அத்திவரதர் கோவிலில் செய்யவில்லை.

    அமைச்சர் யாரும் கோவிலுக்கு சென்று பார்வையிடவில்லை இதனால், முதல்வர் சில அமைச்சர்களை அங்கு அனுப்பி வைத்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் கூட அத்திவரதரை தரிசித்து அருள் பெறவேண்டும் என வந்திருப்பது நாம் பார்க்க முடிகின்றது.

    அரசியல் கட்சிகளை சேர்ந்த குடும்பங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் அங்கு சென்று தரிசித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக அங்கு நடந்து கொண்டிருக்கும் துயர சம்பவங்கள் வேதனையான ஒன்று.

    கூட்ட நெரிசல் காரணமாக கோவிலுக்கு கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் வர வேண்டாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விளம்பரம்.கொடுக்கிறார். பக்தர்களை வரவேண்டாம் எனறு சொல்லும் அளவுக்கு அவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? உடனே அவர் அந்த விளம்பரத்தை திரும்ப பெற வேண்டும். இது தமிழகத்திற்கு தலைக்குனிவான ஒன்று.

    மேலும், பக்தர்களுக்கு உடனடியாக குடிநீர் வசதி உணவு ஏற்பாடுகள் ஆகிய அத்தனை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். வேண்டுமென்றால் திருப்பதி நிர்வாகிகளை கூட கொண்டு வந்து ஏற்பாடுகள் செய்யலாம்.

    மத்திய அரசு இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. இந்தியை எதிர்க்கும் திமுக அரசு நடத்தும் பள்ளியிலேயே இந்தியை கற்று கொடுக்குகிறார்கள். அவர்கள் அந்த பள்ளிகளை மூட தயாரா?. தமிழை தூக்கி தலையில் வைத்துக் கொண்டு ஆடக்கூடிய ஒரு பிரதமர் இருப்பாரானால் அவர் நரேந்திர மோடி மட்டும் தான் எனவே ஒருபோதும் தமிழக மக்கள் எதிர்க்கும் திட்டங்களை திணிக்க மாட்டார்.

    திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அரசு பள்ளிகளை மூடக்கூடிய வேலைகளை தொடங்கினார்கள். தற்போது அதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சரி செய்து வருகிறார் அவருக்குத் தனிப்பட்ட முறையில் எனது பாராட்டுக்கள். இந்தி பற்றி பேசுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எந்த அருகதையும் இல்லை என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    Published by:Sankar
    First published:

    Tags: Pon Radhakrishnan

    அடுத்த செய்தி