• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • என்னதான் சார் பண்ணப் போறீங்க? உங்களுக்கே நியாயமா இருக்கா சாரே- தங்கம் தென்னரசு கேள்வி

என்னதான் சார் பண்ணப் போறீங்க? உங்களுக்கே நியாயமா இருக்கா சாரே- தங்கம் தென்னரசு கேள்வி

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் செங்கோட்டையனுக்கு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Share this:
பள்ளிக் கல்வித்துறை தொடர்பாக அறிக்கை வருவதும், அதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அதை மாற்றிச் சொல்வதும், பிறகு அதற்கு மாற்றாக பள்ளிக் கல்வித்துறை அறிக்கை விடுவதும் இந்த கொரோனோ காலத்தில் தொடர்கதையான ஒன்று. அவ்வப்போது மாறிமாறி அறிக்கைகள் வருவதும், அதை ரத்து செய்வதும், மாணவர்களுக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் தற்போதைய அறிவிப்பு குறித்து திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ விமர்சனம் செய்துள்ளார்.

தங்கம் தென்னரசு தனது முகநூல் பக்கத்தில், அக்டோபர் 1ம் தேதி 10, 11, & 12ம் வகுப்புகளுக்குப் பள்ளி திறக்கப்படும் என்று சொல்கிறீர்கள். ஆனால், கூடவே ஆன்லைனில் பாடம் நடத்துவோம் என்கிறீர்கள். ’பாடங்களைச் சொல்லித்தருவதற்கு இல்லை; சந்தேகங்களைப் போக்குறதுக்காகத்தான் பள்ளிக்கூடத்தைத் திறக்கிறோம்’ எனச் சொல்கிறீர்கள். அப்படியா என்று கேட்பதற்குள், மாணவர்கள் வீட்டிலிருந்தே சந்தேகங்களைப் போக்கிக்கொள்ள கட்டணம் இல்லாத தொலைபேசி சேவையைத் தரப்போறோம் என ஒரு ‘குண்டைப்’ போடுகிறீர்கள் என்பதாக தெரிவித்துள்ளார்.



Also read: எஸ்.பி.பியின் இறுதிச் சடங்கில் கைவரிசையைக் காட்டிய திருடர்கள்: செய்தியாளர் உள்பட 5 பேரின் செல்போன்கள் திருட்டு

அவர் மேலும் கூறுகையில், “அப்படியே சந்தேகம் கேட்க பள்ளிக்கூடத்துக்கு வர்ரதுன்னா அப்பா, அம்மாகிட்ட எழுத்துப் பூர்வமா எழுதி வாங்கிட்டு வந்து சந்தேகம் கேளுங்கன்னு ஜி. ஓ போட்டுட்டு நாளைக்கு ஒண்னுன்னா பழிய அவங்க தலைல கட்டப் பார்க்கறீங்க.

பாடத்திட்டத்துல எவ்வளவு பாடம் இந்த ஆண்டு குறைக்க போறீங்க? மொத்தத்துல இத்தனை சதவீதம்ன்னு குறைக்கப் போறீங்களா? அல்லது, ஒவ்வொரு பாடங்களிலும் குறைப்பு இருக்குமா?
இதை எல்லாம் தெளிவா சொல்லாம மொட்டையா குழு அறிக்கை மேல முதலமைச்சர் முடிவு எடுப்பார்ன்னு எத்தனை நாள் சொல்லீட்டே இருப்பீங்க?

இதுல எதுவுமே உறுதியா தெரியாம எந்தப் பாடத்தைப் பள்ளிக்கூடத்துல நடத்துறது? பாடத்தை நடத்தாம பிள்ளைங்க அதுல என்ன சந்தேகத்தைக் கேக்குறது?

ஈரோட்டில் ஒரு அறிவிப்பு; அடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் ஒரு அறிவிப்பு; இப்போது மீண்டும் ஈரோட்டில் ஒரு மறுஅறிவிப்பு. ‘இடக்கருக்கு வழி எங்கேன்னா கிடக்கிறவங்க தலை மேலே’ அப்டின்னு சொல்ற மாதிரி எல்லார் மண்டையையும் பிய்த்துக்கொள்ள வைத்து இந்தக் குழப்பம் பண்றீங்களே? உங்களுக்கே நியாயமா இருக்கா, சாரே?” என தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: