ஆவினில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ராஜேந்திர பாலாஜி தலைமறைவு ஆகியுள்ள நிலையில், அவரை பிடிக்க மேலும் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஆவினில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்துதலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரை பிடிக்க குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் முதலில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மேலும் 3 தனிப்படை அமைக்கப்பட்டு 6 தனிப்படை போலீசார் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரை தேடி வந்தனர். தற்போது மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவின் பேரில் மேலும் 2 தனிப்படை என மொத்தம் 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான விவகாரம்: தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்
பெங்களூருவில் இருப்பதாக வந்த தகவல் அடிப்படையில் ஒரு தனிப்படை பெங்களூரு விரைந்தது,தற்போது தென்காசி குற்றாலம், கேரளாவில் இருப்பதாக வந்த தகவலையடுத்து 2 தனிப்படை அங்கு விரைந்துள்ளது. ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் செல்போன் எண்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.