காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு மரணத்தில் சந்தேகம்.. போலீசில் மகள் புகார்...

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த அன்பரசு கடைசி காலத்தில் வழக்கால் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், மரணத்திற்கு பிறகு சொத்துக்காக அவரது உடலை வைத்து வாரிசுகள் சண்டையிட்டுக் கொள்ளும் நிகழ்வு காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Web Desk | news18
Updated: August 9, 2019, 6:01 PM IST
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு மரணத்தில் சந்தேகம்.. போலீசில் மகள் புகார்...
அன்பரசு மரணம்
Web Desk | news18
Updated: August 9, 2019, 6:01 PM IST
காங்கிரஸ் சார்பில் 3 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்பரசு நேற்று காலமானார். இந்நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மகள் போலீசில் புகாரளித்துள்ளார். 

1989, 1991-ம் ஆண்டு மத்திய சென்னை தொகுதியில் இருந்தும், 1980 -ம் ஆண்டு செங்கல்பட்டு தொகுதியில் இருந்தும் காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் அன்பரசு.

மக்களவையில் காங்கிரஸ் செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளை அன்பரசு வகித்துள்ளார்.


நிர்வாக வசதிக்காக தமிழகத்தை இரண்டாக பிரிக்கவேண்டும் என சமீபத்தில் கோரிக்கை விடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

செக் மோசடி வழக்கில் சிக்கிய அன்பரசுக்கு கீழ்நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு தண்டனையை சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

சுமார் ரூ. 400 கோடி சொத்துக்கு அதிபதியான அன்பரசு, ரூ. 2 கோடி கொடுக்க முடியாமல் செக் மோசடி வழக்கில் சிக்கி 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Loading...

நீதிமன்றம் விதித்த தண்டனையால் மன உளைச்சலில் இருந்த அன்பரசு, கடந்த வியாழக்கிழமை மாலை குமணன்சாவடியில் உள்ள வீட்டில் இருந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அன்பரசுவின் மனைவி கமலா 2017-ம் ஆண்டும், மூத்த மகன் அசோக் கடந்த ஆண்டும் உயிரிழந்தனர்.

அன்பரசுவின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட இருந்த நிலையில், திடீர் திருப்பமாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் அன்பரசுவின் மகள் சுமதி புகார் ஒன்றை அளித்தார்.

தமது தந்தை உயிரிழப்பில் சந்தேகம் இருப்பாகவும், தமது சகோதரரும் சோளிங்கர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ-வுமான அருள் அன்பரசு மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

செக் மோசடி வழக்குக்கு பணம் கட்ட வேண்டும் என்ற காரணத்தால் அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அவரை சாகடித்திருப்பதாக கூறியுள்ளார்.

சுமார் ரூ. 400 கோடி சொத்துக்களுக்கு அதிபதியான தனது தந்தையால் 2 கோடி ரூபாயை கட்ட முடியாதா என்றும் கேள்வி எழுப்பினார்.

தன்னுடைய அம்மா இறந்த போது கூட அவரை பார்க்க தன்னை அனுமதிக்கவில்லை என அருள் அன்பரசு மீது குற்றம்சாட்டிய சுமதி, சொத்தை அபகரிக்கவே தனது தந்தையை மன உளைச்சலுக்கு ஆளாக்கி சாகடித்ததாக சுமதி கூறியுள்ளார்.

சுமதியின் புகாரை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்ய அருள் அன்பரசு கேட்டுக்கொண்டார். இதை அடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அன்பரசு உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சுமதியின் புகார் பொய்யானது என்றும், அருள் அன்பரசு விளக்கமளித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த அன்பரசு கடைசி காலத்தில் வழக்கால் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், மரணத்திற்கு பிறகு சொத்துக்காக அவரது உடலை வைத்து வாரிசுகள் சண்டையிட்டுக் கொள்ளும் நிகழ்வு காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Also watch: அத்திவரதர் : அலைமோதும் கூட்டம் - கடைசிநாள் தரிசனம் ரத்து

First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...