டிடிவி தினகரன் கட்சியில் இருந்து வி.பி. கலைராஜன் நீக்கம் !

விபி கலைராஜன் வகித்து வந்த பொறுப்புக்கு வி. சுகுமார் பாபு நியமிக்கப்படுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் கட்சியில் இருந்து வி.பி. கலைராஜன் நீக்கம் !
வி.பி. கலைராஜன்
  • Share this:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த வி.பி. கலைராஜனை கட்சியில் இருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை குறிக்கோகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபி கலைராஜன் வகித்து வந்த பொறுப்புக்கு வி. சுகுமார் பாபு நியமிக்கப்படுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

வி.பி.கலைராஜன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் பரவிய நிலையில், டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

First published: March 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்