துப்பாக்கியைக் கொண்டு மிரட்டிய சுங்கச் சாவடி ஊழியர் - முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி குற்றச்சாட்டு

துப்பாக்கியைக் கொண்டு மிரட்டிய சுங்கச் சாவடி ஊழியர் - முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி குற்றச்சாட்டு
  • News18
  • Last Updated: January 19, 2020, 7:34 AM IST
  • Share this:
சுங்கச்சாவடியில் துப்பாக்கியைக் கொண்டு ஊழியர் மிரட்டியதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாவட்டம் மணவாசியில் சுங்கச்சாவடி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக செல்வதற்காக காரில் மணவாசி சுங்கச்சாவடி வழியாக சென்றுள்ளார்.

அப்போது மணவாசி சுங்கச்சாவடியில் முன்னாள் எம்எல்ஏ அடையாள அட்டையை பாலபாரதி காட்டியுள்ளார். அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் அனுமதி மறுத்து கட்டணம் செலுத்தவேண்டும் என சுங்கச்சாவடி ஊழியர்கள் காரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது சுங்கச்சாவடி பாதுகாவலர் துப்பாக்கியுடன் வந்து இவரின் கார் முன்பு நின்றுகொண்டு வாக்குவாதம் செய்துள்ளனர். 30 நிமிடம் வாக்குவாதத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.


இதுகுறித்து தகவலறிந்த சுங்கச்சாவடி அருகே இருந்த புறக்காவல் நிலைய போலீஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பாலபாரதி அங்கிருந்து புறப்பட்டார. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், அவரிடம் தொலைபேசி வாயிலாக கேட்டபோது முன்னாள் எம்.எல்.ஏ.க்கான அடையாள அட்டை காண்பித்தபோது பணம் கட்டி செல்ல வேண்டும் என வற்புறுத்தி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சுங்கச்சாவடி ஊழியரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே ஊழியர்கள் என்னை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு காரின் முன்பு நின்று மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், துப்பாக்கியை நீட்டும் உரிமையை டோல் கேட் நிர்வாகத்திற்கு கொடுத்தது யார் என வினவியுள்ளார். இப்பிரச்னையில் முதல்வர் பழனிசாமி உடனடியாக தலையிட்டு துப்பாக்கி வைத்திருக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது என விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

 
First published: January 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்