• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு - உயர் நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு - உயர் நீதிமன்றம்

சரோஜா

சரோஜா

சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்துக்காக பல்வேறு நபர்களிடம் இருந்து 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வசூலித்து, சமூக நலத் துறை முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகராஜனிடம் வழங்கியதாகவும், பணத்தை பெற்றுக் கொண்டு எவருக்கும் பணி நியமனம் வழங்கவில்லை எனக் கூறி குணசீலன் என்பவர் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் காவல் துறையினர் தங்களை கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகராஜன் ஆகியோர் ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், பணிநியமனம் வழங்குவதாக கூறி எவரிடமும் பணம் பெறவில்லை எனவும், புகார் அளித்த குணசீலன் தங்கள் உறவினர் என்றும் குடும்ப பகை காரணமாக தங்களுக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சத்துணவு அமைப்பாளர்கள், தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களால் நியமிக்கப்பட்டதாகவும், இந்த புகார் தொடர்பாக ராசிபுரம் போலீசார் ஏற்கனவே தங்களை விசாரித்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து பதிலளிக்க அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா கால அவகாசம் கோரினார்.

    இதை ஏற்று விசாரணையை நவம்பர் 24ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்க கூடாது என அறிவுறுத்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: