இருமடங்கு சொத்து குவிப்பு... எம்.ஆர்.விஜயபாஸ்கரை துரத்தும் வழக்குகள்

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

பதவியை தவறாக பயன்படுத்தி 55 % மேல் சொத்துகளை வாங்கி குவித்திருப்பதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 • Share this:
  கடந்த ஆட்சியில் ஐந்தாண்டு போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் கரூரை சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர். கடந்த 22 ஆம் தேதி இவருக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய 26 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையை செய்தனர். இதில் பல சொத்து ஆவணங்களும் பல்வேறு முதலீட்டு நிறுவனங்களில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தார் முதலீடு செய்த ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததன் காரணமாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விஜயபாஸ்கருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ததுதான் இந்த அதிரடி சோதனைக்கு முக்கியகாரனமாக இருந்துள்ளது. முதல் தகவல் அறிக்கையில் எம்.ஆர் விஜயபாஸ்கர் முதல் குற்றவாளியாகவும் , அவரது மனைவி விஜயலட்சுமி இரண்டாவது குற்றவாளியாகவும் ,விஜயபாஸ்கரின் இளைய சகோதரர் சேகர் மூன்றாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  ரெயின்போ பேக்கேஜிங் ,ரெயின்போ டயர்ஸ், ரெயின்போ கலர்ஸ், ரெயின்போ ஹோம் பேப் பிரைவேட் லிமிடெட்,ரெயின்போ புளுமெட்டல்,விஸ்வா எக்ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட 10 நிறுவனங்களை முன்னாள் அமைச்சரும், அவரது மனைவியின் சேர்ந்து நடத்திவருகிறார்கள். இந்த நிறுவனங்களில் விஜயபாஸ்கரின் இளைய சகோதரர் சேகரும் பங்குதாரராக இருந்துவருகின்றார்.  சாதாரண குடும்ப பின்னணி கொண்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தந்தை ராமசாமி சிறிய அளவில் சாயப்பட்டறை மட்டுமே நடத்திவந்துள்ளார். அரசியல் ,அமைச்சர் ஆனவுடன் எம்.ஆர் .விஜயபாஸ்கரின் சொத்துக்கள் பல மடங்கு அதிகரித்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  2016 ஆம் ஆண்டு தேர்தலுக்குக்கான வேட்புமனுல் தனது சொத்து மதிப்பை ரூபாய் இரண்டு கோடியே 51 லட்சத்து ,91 ஆயிரத்து 378 என்று கணக்கு காட்டியுள்ளார். (2,51,91,378) 2016 மற்றும் 2021 இடைப்பட்ட காலகட்டத்தில் சட்டபூர்வமாக கிடைத்த வருமானம் என்று ரூபாய் 4 கோடியே 91 ஆயிரத்து ,78 ஆயிரத்து ,366 ஆறு என்று தனது 2021 ஆம் ஆண்டு வேட்ப்பு மனுவில் தெரிவித்துள்ளார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

  Also Read : ரேஷன் கடை ஊழியர்கள் காலி பணியிடம் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் தகவல்!

  2021 தேர்தலில் செய்திருந்த வேட்பு மனுவி தனது சொத்து மதிப்பை ரூபாய் 8 கோடியே 62 லட்சத்து 35 ஆயிரத்து 648 என்று 2016 ஆம் ஆண்டு தாக்கல் செய்த சொத்து மதிப்பை விட 55 % உயர்த்தி கணக்கு காட்டியுள்ளார். ( 8,62,35,648). இதில் வரவு செலவு போக மீதம் இரண்டு கோடியே 68 லட்சத்து ,38 ஆயிரத்து ,487 ரூபாய் கணக்கில் வராமல் வருமானம் காட்டப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

  அத்துடன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருடன் பங்குதாரராக இருந்த அவரது சகோதரர் சேகர் கரூரில் பல இடங்களில் கோடி கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துக்குவிப்பு வழக்கு மட்டும் இல்லாமல் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு அனுமதிகொடுப்பதில் ரூபாய் 2000 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பது தொடர்பாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

  ஸ்டிக்கர் விற்பனை தொடர்பாகவும் இரண்டு ஒப்பந்ததாரர்களையும் போலீசார் விசாரணை வளையத்தில் கொண்டு வந்துள்ளனர்.. ஸ்டிக்கர் மோசடி விவகாரம் தொடர்பாக தனி வழக்கு பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

  ஸ்டிக்கர் வழக்கும், சொத்துக் குவிப்பு வழக்கும் துரத்தும் நிலையில், சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என தைரியமாக எம்.ஆர்.விஜய பாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: