‘அண்ணே, அண்ணே ஸ்டாலின் அண்ணே’- பாட்டுப்பாடி ஜெயக்குமார் ஆர்ப்பாட்டம்

ஜெயக்குமார்

திமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை, ராயப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, பாட்டுப்பாடி ஆர்ப்பாட்ட இடத்தை ஜெயக்குமார் கலகலப்பாக்கினார்.

  • Share this:
    தி.மு.க அரசுக்கு எதிராக அ.தி.மு.க சார்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாட்டுப்பாடி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசுக்கு எதிராக, அ.தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க: கடலூரில் சமூக இடைவெளியை தவறாக புரிந்து வட்டமாக கூட்டம் - நகைப்புக்கு உள்ளான அ.தி.மு.க போராட்டம்!


    சென்னை, ராயப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக அரசைக் கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது அமைச்சர் ஜெயக்குமார், “ அண்ணே, அண்ணே, ஸ்டாலின் அண்ணே, நம்ம ஊரு நல்ல ஊரு.. இப்போ ரொம்ப கெட்டுப்போச்சுண்ணே” என சினிமா பாடல் பாணியில் தமிழக அரசை விமர்சித்து பாட்டு பாடினார். அவர் உடன் இருந்த அதிமுகவினரும் ஜெயக்குமார் பாட்டுப்பாட அதனை திருப்பி பாடினர்.  இதனால், ஆர்ப்பாட்டம் கலகலப்பாக சென்றது.

    இதையும் படிக்க: தமிழக அரசின் விருதை ஏற்கிறேன், ரூ.10 லட்சம் பரிசுத் தொகை மக்களுக்கு போகட்டும் - சங்கரய்யா!



    இது தொடர்பான வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பகிர்ந்துள்ளார்.
    Published by:Murugesh M
    First published: