பாவம் திமுக அமைச்சருக்கு தண்ணீரில் கண்டம்.. ஜெயகுமார் விமர்சனம்

அமைச்சர் அனிதா ராதாகிருஷண்னனை மீனவர்கள் தூக்கி செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலானது. இதனை முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

  • Share this:
    கடல் நீரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணின் கால் நணையாதபடி மீனவர்கள் தூக்கி சென்றதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேலி செய்துள்ளார்.

    திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் கடலும் ஏரியும் இணையும் முகத்துவாரம் பகுதி மணல்மேடு ஆகி போனதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டனர். இதனால் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பழவேற்காடு ஏரியில் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்களுடன் படகில் பயணித்து முகத்துவாரத்தை ஆய்வுசெய்தார்.

    அப்புாது நிரந்தர முகத்துவாரம் மீன்பிடிதுறைமுகம் என மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தார். அதன்பின் படகு மூலம் கரைக்கு திரும்பிய போது அமைச்சரின் கால் கடல்நீரில் நனையாமல் இருக்க மீனவர்கள் இரண்டு பேர் அவைர தோளில் சுமந்தபடி சென்றனர்.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷண்னனை மீனவர்கள் தூக்கி செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலானது. இதனை முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.



    அதில்பாவம் திமுக அமைச்சருக்கு தண்ணீரில் கண்டம்.. கடல்தாயின் அலைக்கரங்கள் காலில் தழுவுவதைக் கூட தாங்க முடியாத ஒருவரா? மீன்வளத்துறைக்கு அமைச்சர்.. வெட்கக் கேடு... என்று பதிவிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: