முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மரக்கன்று நட்டதில் ரூ.50 லட்சம் மோசடியா: குற்றச்சாட்டு குறித்து திண்டுக்கல் சீனிவாசன் அளித்த விளக்கம்

மரக்கன்று நட்டதில் ரூ.50 லட்சம் மோசடியா: குற்றச்சாட்டு குறித்து திண்டுக்கல் சீனிவாசன் அளித்த விளக்கம்

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

உண்மையை தெரிந்து கொள்ளாமல் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொய்யான தகவலை என் மீது உள்ள காழ்ப்புணர்சி காரணமாக புகார் செய்து உள்ளனர் – திண்டுக்கல் சீனிவாசன்

  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மலைக்கோட்டை மீது மரம் வளர்க்கும் திட்டத்தில் மோசடி நடந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என தெரிந்தால் அவர்கள் பொது வாழ்வில் இருந்து விலகி அரசியலை விட்டு விலக வேண்டும் என்றும் புகார் கொடுத்த கம்யூனிஸ்ட் தோழர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் மலைக்கோட்டையில் மரம் வளர்க்கும் திட்டத்தில் 50 லட்சம் வரை முறைகேட்டில்  ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இந்த நிலையில் திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.

அப்போது அவர், திண்டுக்கல் மலைக்கோட்டை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மலை.  நான் வன துறை அமைச்சராக இருந்தபோது வனத்துறை அதிகாரிகள் மூலம் ஐந்தாயிரம் மரக்கன்றுகளில் சுமார் 1250 மரக்கன்றுகள் மலையின் மேல் பகுதியிலும் மீதம் உள்ளவை மலையில் கீழ் பகுதியிலும் நடவு செய்யப்பட்டது.

2019 ஆம் ஆண்டு வீசிய கஜா புயல் மற்றும் 2019 ஆம் ஆண்டில் மலையில் ஏற்பட்ட தீ விபத்தினாலும் மரக்கன்றுகள் சேதம் அடைந்தது போக மீதமுள்ள மரக்கன்றுகள் அங்கு உள்ளது.

பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்து கட்டணம் குறைக்கப்படுகிறதா ?

சேதமடைந்தற்கு பதில் புதிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க தொல்லியல் துறை அனுமதி தரவில்லை. சேதாரம் ஏற்பட்டது போக மீதம் உள்ள மரக்கன்றுகள் அங்கு உள்ளது. வனத்துறை மூலம் கணக்கு எடுக்கப்பட்டு செலவு செய்தது போக மீதம் உள்ள நிதியின் தொகையை வனத்துறை அதிகாரிகள் மூலம் அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டதாக அதிகாரிகள் கூறினர்.

உண்மை இப்படி இருக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இது பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் புகார் கொடுத்துள்ளனர். வனத்துறை அதிகாரியிடம் கேட்டிருந்தாலே அவர்களுக்கு உண்மை நிலவரம் தெரிந்து இருக்கும். மரம் நட்டது யார்? பராமரிப்பது யார்? என தெரிந்து கொள்ளாமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொய்யான தகவலை என் மீது உள்ள காழ்ப்புணர்சி காரணமாக புகார் செய்து உள்ளனர்.

‘ஆ. ராசாவின் பேசியதில் எந்த தவறும் கிடையாது’ – சி.பி.எம். மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கருத்து

top videos

    மலைக்கோட்டை மரம் வளர்ப்பு திட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் என் மீது கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என தெரிந்தால் அவர்கள் பொது வாழ்வில் இருந்து விலகி அரசியலை விட்டு விலக வேண்டும்., மேலும் என்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’ என தெரிவித்தார்.

    First published:

    Tags: Dindigal Sreenivasan