ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரூ.87 கோடியை குட்கா நிறுவனம் மற்றும் சேகர் ரெட்டியிடம் லஞ்சம் பெற்றார் சி.விஜயபாஸ்கர் - நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்

ரூ.87 கோடியை குட்கா நிறுவனம் மற்றும் சேகர் ரெட்டியிடம் லஞ்சம் பெற்றார் சி.விஜயபாஸ்கர் - நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்

குட்கா நிறுவனத்திடம் இருந்து 2 கோடியே 45 லட்சம் ரூபாயும், சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ்.ஆர்.எஸ் மைனிங் நிறுவனத்திடம் 85 கோடியே 45 லட்சம் ரூபாயையும் விஜயபாஸ்கர் லஞ்சமாக பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

குட்கா நிறுவனம் மற்றும் சேகர் ரெட்டியிடம் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் 87 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல் அளித்துள்ளது.

2017-ம் ஆண்டு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமானவரித்துறை நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 2011-12 ஆண்டு முதல் 2018-19 -ம் ஆண்டு வரையிலான காலத்துக்கு ரூ.206.42 கோடி வருமான வரி பாக்கியை வசூலிக்கும் வகையில் புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களை முடக்கியும், 3 வங்கிக்கணக்குளை முடக்கியும் வருமானவரித்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

இதையும் படிக்க :  அதிமுக ஆட்சியை விமர்சிக்க பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி வேண்டும் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

சொத்துகள் முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை சார்பில் பதில் மனுவில், குட்கா நிறுவனத்திடம் இருந்து 2 கோடியே 45 லட்சம் ரூபாயும், சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ்.ஆர்.எஸ் மைனிங் நிறுவனத்திடம் 85 கோடியே 45 லட்சம் ரூபாயையும் விஜயபாஸ்கர் லஞ்சமாக பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 30 கோடியே 90 லட்சம் ரூபாயை அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த கூவத்தூர் ரிசாட்டுக்கும் விஜயபாஸ்கர் கொடுத்ததாகவும் வருமான வரித்துறை குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு, விஜயபாஸ்கர் தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை டிசம்பர் 12-ம் தேதிக்கு நீதிபதி அனிதா சுமந்த் ஒத்திவைத்தார்.

First published:

Tags: Income tax, Madras High court, Vijayabaskar