கமுதியில் டாஸ்மாக் திறப்பு - உற்சாகத்தில் சிலம்பாட்டம் ஆடிய முன்னாள் ராணுவ வீரர்

கமுதியில் மதுக்கடை திறந்ததும் உற்சாகத்தில் முதியவர் ஒருவர் சிலம்பாட்டம் ஆடினார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இன்று அரசு டாஸ்மாக் மது கடை திறக்கபட்டதையடுத்து, வரிசையில் நின்ற முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் உற்சாகமடைந்து சிலம்பாட்டத்தில் ஈடுபட்டார்.

  • Share this:
    தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட்டுள்ளதால் அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தும் கடந்த 40 நாட்களுக்கு முன் மூடப்பட்டது

    இந்த நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை இன்று முதல் மதியம் 12 மணிக்கு பதிலாக காலை 10 மணிக்கு திறந்து மாலை 5 மணி வரை திறந்து விற்பனை செய்ய உத்தரவிட்டது.

    இன்று டாஸ்மாக் கடை திறக்கபட உள்ளதையடுத்து மது பிரியர்களை இன்று அதிகாலையில் கடைகளுக்கு முன்பாக வந்து வரிசையில் நிற்க துவங்கினர். கமுதி குண்டாற்று கரையோரத்தில் நீண்ட வரிசையில் குடிமகன்கள் நின்றனர். அப்போது, கடை திறந்ததும் வரிசையில் நின்ற முன்னாள் ராணுவ வீரர் குருசாமி, உற்சாகத்தில் சிலம்பு கம்பை வைத்து சுற்றினார்.

    படிக்க: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை விபரங்கள் வெளியீடு - முழு பட்டியல்








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Vaijayanthi S
    First published: