கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாகவும், 3 முறை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் நடிகை சாந்தினி, மணிகண்டன் மீது புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டிருந்தது.
இதில், கைதை தவிர்க்கும் வகையில் முன்ஜாமின் கேட்ட மணிகண்டனின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து இரு தனிப்படைகள் அமைத்து மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களில் மணிகண்டனை காவலர்கள் தேடி வந்தனர். மணிகண்டனின் ஓட்டுநர், உதவியாளரிடமும் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
ALSO READ | 2008ல் தப்பி பிழைத்து வலிமையின் சின்னமாக புகழப்பட்ட பன்றி மரணம் - சீன மக்கள் அஞ்சலி!
மணிகண்டன், தென் மாவட்டங்களில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மதுரைக்கு விரைந்த தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்த போது, அவரது செல்போன் சிக்னல் கர்நாடக மாநிலத்தில் இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து அவரது செல்போன் சிக்னலை பின்தொடர்ந்த காவல்துறையினர் இன்று காலை 8.30 மணியளவில் மணிகண்டனை பனகனஹள்ளி பகுதியில் இருந்த பண்ணை வீட்டில் கைது செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மணிகண்டன் முதலில் திருநெல்வேலிக்கு தப்பிச் சென்றதும், பின்னர் அங்குள்ள நண்பர் உதவியுடன் பெங்களூருவில் உள்ள நண்பர் சீனிவாசனை தொடர்பு கொண்டதும் தெரிய வந்துள்ளது. முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் நண்பர் சீனிவாசனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் மணிகண்டன் 5 நாட்கள் தங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ALSO READ | வடகொரியாவில் கடுமையான உணவுப் பஞ்சம்: ஒரு கிலோ வாழைப்பழம் ரூ.3,300க்கு விற்பனை
இதனிடையே, சென்னைக்கு அழைத்து வரப்பட்ட மணிகண்டனுக்கு, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மணிகண்டன் மற்றும் அவர் தலைமறைவாக இருக்க உதவி செய்து அவருடனேயே தங்கி இருந்த பீரவின், இளங்கோ என்ற இரண்டு உதவியாளர்களிடம் அடையாறு காவல்நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
இதையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கில் பாலியல் பலாத்தகாரம் என்ற அடிப்படையில் எடுத்தகொள்ள முடியாது.பெண்ணின் விருப்பத்துடன் தான் இருவரும் பழகி உள்ளனர் என வழக்கின் பிரிவை மாற்ற மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Former Minister