• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • "முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கு பாலியல் பலாத்தகாரம் அல்ல; விருப்பத்தோடு தான் பழகி உள்ளனர்" - வழக்கின் பிரிவை மாற்ற மாஜிஸ்திரேட் உத்தரவு

"முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கு பாலியல் பலாத்தகாரம் அல்ல; விருப்பத்தோடு தான் பழகி உள்ளனர்" - வழக்கின் பிரிவை மாற்ற மாஜிஸ்திரேட் உத்தரவு

மணிகண்டன் - சாந்தினி

மணிகண்டன் - சாந்தினி

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் நண்பர் சீனிவாசனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் மணிகண்டன் 5 நாட்கள் தங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 • Share this:
  முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கில் பாலியல் பலாத்தகாரம் என்ற அடிப்படையில் எடுத்தகொள்ள முடியாது.பெண்ணின் விருப்பத்துடன் தான் இருவரும் பழகி உள்ளனர் என வழக்கின் பிரிவை மாற்ற மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளது.

  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். கடந்த 2019ம் ஆண்டு அதிமுக அரசைக் குறை கூறியதால் சர்ச்சையில் சிக்கிய மணிகண்டனின், அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த மே மாதம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை சாந்தினி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

  கடந்த மே 28ம் தேதி சென்னை காவல் ஆணையரிடம் சாந்தினி அளித்திருந்த புகாரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனும் தானும் கணவன்-மனைவியைப் போல ஐந்து ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், மூன்று முறை கர்ப்பமடைந்த போதிலும், அவரது மிரட்டலால் அந்த கருவைக் கலைத்ததாகவும் கூறியிருந்தார். மேலும், தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையிலேயே அவருடன் ஒன்றாக வாழ்ந்ததாகவும், ஆனால், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதுடன், கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் சாந்தினி கூறியிருந்தார்.

  ALSO READ |  ' விஷால் நாட் ஏ காமன் மேன்' - பெயர் திருட்டு சர்ச்சையில் சிக்கிய விஷால்

  அந்தப் புகார் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு, 6 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், தலைமறைவான மணிகண்டனைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக மணிகண்டனின் கார் ஓட்டுனர், உதவியாளர், அவர் அமைச்சராக இருந்த போது பணியிலிருந்த காவலர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

  ALSO READ |  நியூஸ் 18 செய்தி எதிரொலி ஆபாச யூடியூபர் மதன் யூடியூப் சேனல் முடக்கம்

  மணிகண்டன், தென் மாவட்டங்களில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மதுரைக்கு விரைந்த தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்த போது, அவரது செல்போன் சிக்னல் கர்நாடக மாநிலத்தில் இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து அவரது செல்போன் சிக்னலை பின்தொடர்ந்த காவல்துறையினர் இன்று காலை 8.30 மணியளவில் மணிகண்டனை பனகனஹள்ளி பகுதியில் இருந்த பண்ணை வீட்டில் கைது செய்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மணிகண்டன் முதலில் திருநெல்வேலிக்கு தப்பிச் சென்றதும், பின்னர் அங்குள்ள நண்பர் உதவியுடன் பெங்களூருவில் உள்ள நண்பர் சீனிவாசனை தொடர்பு கொண்டதும் தெரிய வந்துள்ளது. முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் நண்பர் சீனிவாசனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் மணிகண்டன் 5 நாட்கள் தங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  ALSO READ |  தமிழகத்தில் 8,000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

  இதனிடையே, சென்னைக்கு அழைத்து வரப்பட்ட மணிகண்டனுக்கு, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மணிகண்டன் மற்றும் அவர் தலைமறைவாக இருக்க உதவி செய்து அவருடனேயே தங்கி இருந்த பீரவின், இளங்கோ என்ற இரண்டு உதவியாளர்களிடம் அடையாறு காவல்நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankaravadivoo G
  First published: