ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 21 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 21 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

சி. விஜயபாஸ்கர்

சி. விஜயபாஸ்கர்

குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 21 பேர் மீது, சென்னை சிபிஐ கூடுதல் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சென்னை செங்குன்றத்தில் எம்டிஎம் என்ற பான் மசாலா நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் கடந்த 2016ஆம் ஆண்டு நடத்திய சோதனையில், 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட டைரியில், தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்காவை சட்டவிரோதமாக விற்பனை செய்ய அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் காவல்துறை, உணவு பாதுகாப்புத் துறை, வணிகவரித் துறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

  வருமான வரித்துறையின் அறிக்கையைத் தொடர்ந்து, விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்த சிபிஐ, முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு சோதனையும் நடத்தியது. அதன்பின்னர், சென்னை சிபிஐ கூடுதல் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேர் மீது கடந்த 2018ஆம் ஆண்டு முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

  இதையும் படிங்க: அடுத்த கல்வியாண்டில் இருந்து புதிய பாடத்திட்டங்கள் : அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

  அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிலும், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் வணிக வரித்துறை, காவல்துறை மற்றும் கலால்துறை அதிகாரிகளான குறிஞ்சி செல்வன், கணேசன், லட்சுமி நாராயணன், மன்னர் மன்னன் ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: CBI, Gutka scam, Vijayabaskar