ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பை ஏற்கிறோம் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பை ஏற்கிறோம் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஏழு பேரின் விடுதலைக்கு திமுக எந்த முயற்சியும், சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஜெயக்குமார் குற்றச்சாட்டு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக நாளை  திமுக நடத்தும் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களிடம்  பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்த ஆறு பேர் விடுதலை என்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் என தெரிவித்தார்.

பின்னர், ஏழு பேர் விடுதலைக்காக ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடியார் முதல்வராக இருந்தபோது ஏழு பேர் விடுதலைக்காக ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் அமைச்சரவையைக் கூட்டி ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து சட்ட நடவடிக்கை எடுத்ததாகவும் கூறினார்.

இந்த வெற்றியானது அதிமுக எடுத்த தொடர் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியெனவும் ஏழு பேரின் விடுதலைக்கு திமுக எந்த முயற்சியும், சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறிய அவர், இந்த வெற்றியை தங்களுக்கானது என்று திமுக சொல்லிக் கொள்வது அபத்தம் எனவும் கூறினார்.

திமுக ஆட்சி தொடர்ச்சியாக தமிழர்களை வஞ்சித்து வருவதாகவும் நீட், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்கள் யாருடைய ஆட்சி காலத்தில் அனுமதி அளிக்கப்பட்டது எனவும் கூறினார்.

மேலும், முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான விஷயத்தில் திமுக பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவதாக தெரிவித்த அவர், 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமையும் விடுமுறை அறிவிப்பு - முழு விவரம்

முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக நாளை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கவுள்ள அனைத்து கட்சிக்கூட்டத்தில் அதிமுக கலந்துக்கொள்ளாது எனவும் தெரிவித்தார். மேலும், அதிமுக ஆட்சி காலத்தில் அரசு மீது அவதூறு தெரிவித்தோரை மிரட்டுவதற்காக, அவர்களை அடக்கி வைப்பதற்காக வழக்கு பதிவுகள் மட்டுமே செய்தோம். கைது செய்ததில்லை. ஆனால், திமுக அரசானது தங்களை எதிர்த்து யாராவது குரல் கொடுத்தாலே, கருத்துக்கள் தெரிவித்தாலும் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.

திமுக காரர்கள் மீது ஆதாரத்துடன் பல புகார்கள் கொடுக்கப்பட்ட போதும் அவர்கள் மீது மட்டும் வழக்கு பதிவும் செய்யப்படாது. கைது நடவடிக்கையும் எடுக்கப்படாது. எந்த தவறுமே செய்யாத தன்னை திடீரென வீட்டுக்கு உள்ளே புகுந்து கைது செய்தனர். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டபோது அடுத்தடுத்து வழக்குகள் போடப்பட்டு மீண்டும் மீண்டும் கைது செய்தனர். ஏனென்றால் திமுக மக்கள் விரோத அரசு என செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Published by:Arunkumar A
First published:

Tags: ADMK, All Party Meeting, Jayakumar, Reservation