முதல்வர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!

அரசியல் கட்சியினர், சமூகநல இயக்கத்தினர் என பல்வேறு தரப்பினரின் ஆதரவு மற்றும் எதிர்ப்புகளுக்கிடையே, 10 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • News18
  • Last Updated: July 8, 2019, 7:34 AM IST
  • Share this:
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு மருத்துவ படிப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக விவாதிக்க இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

பொருளாதார ரீதியாக பின் தங்கிய உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவ மாணவர் சேர்க்கையில் 10 சதவீத இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் வலியுறுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2-ம் தேதி சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்,  அரசின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார்.


அப்போது பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றார். இதைத் தொடர்ந்து இன்று மாலை 5.30 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்த உள்ளதாக பேசப்படுகிறது.

தலைவர்களின் கருத்துகள் அடிப்படையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. இதைத்தொடர்ந்து 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது.இதற்கிடையே, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இடஒதுக்கீடு விவகாரத்தில், அனைத்துக்கட்சித் தலைவர்களின் கருத்துக்களை கேட்ட பின்பு, அதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்வார் என்றார்.

இந்நிலையில், மருத்துவ படிப்புகளுக்கு கூடுதல் இடங்களை உருவாக்குவதன் மூலம், தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எந்த குறையும் ஏற்படாமல் இருந்தால், 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பவில்லை என்றனர்.

அரசியல் கட்சியினர், சமூகநல இயக்கத்தினர் என பல்வேறு தரப்பினரின் ஆதரவு மற்றும் எதிர்ப்புகளுக்கிடையே, 10 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க... சாலையோர உணவகத்தில் தோசை சாப்பிட்ட ராகுல்காந்தி!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading