திருச்சியில் 139 பொருட்களுடன் வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்

திருச்சியில் 139 பொருட்களுடன் வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்படுகின்றது

திருச்சி மாவட்டத்தில், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, மணப்பாறை, திருவெறும்பூர் ஸ்ரீரங்கம், லால்குடி, மண்ணச்சநல்லூர் முசிறி, துறையூர் (தனி) என மொத்தம், 9 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன

  • News18
  • Last Updated :
  • Share this:
திருச்சியில் 9 சட்டப் பேரவைத் தொகுதி வாக்குச் சாவடிகளுக்கு 139 பொருட்களுடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்படுகின்றது.

திருச்சி மாவட்டத்தில், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, மணப்பாறை, திருவெறும்பூர் ஸ்ரீரங்கம், லால்குடி, மண்ணச்சநல்லூர் முசிறி, துறையூர் (தனி) என மொத்தம், 9 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த, 9 தொகுதிகளில், மொத்தம் 159 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மாவட்டம் முழுவதும்  11,35,780 ஆண் வாக்காளர்கள், 12,02,728 பெண் வாக்காளர்கள், 237 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம், 23,38,745 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள, 9 தொகுதிகளில் மக்கள் வாக்களிப்பதற்காக  1,147 மையங்களில், 3,292 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பதட்டமான வாக்குச்சாவடிகள், 156 உட்பட, 1,490 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் (வெப் கேமரா) பொருத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில், 5,678 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,950 கட்டுப்பாட்டு கருவிகள், 4, 247 'விவிபேட்' எனப்படும், யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

Also read... இந்திய தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக சுகாதார பணியாளர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர் - ராதாகிருஷ்ணன்!

மொத்தம், 15,473 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். மொத்தம் 5,000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 188 நுண் பார்வையாளர்கள்,  215 மண்டல அளவிலான அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவிற்கு தேவையான உபகரணங்கள், கோவிட் பாக்ஸ் உள்ளிட்டவை இன்று காலை முதல் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வாக்காளர்களுக்கும் வழங்கப்படும் கையுறைகள் மற்றும் மருத்துவ கழிகளைச் சேகரிப்பதற்கான பக்கெட்டுகள், மாஸ்க், கிருமி நாசினி உள்ளிட்ட 11 பொருட்கள் உள்ள  கொரோனா தடுப்பு பெட்டி, வாக்குப் பதிவிற்கு தேவையானா அழியாத மை, பேனா உள்ளிட்ட 128 உபகரணங்கள் ஆகியவற்றை மண்டல வாரியாக அனுப்பி வைத்தனர். இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: