Home /News /tamil-nadu /

ஓட்டு மெஷினில் தில்லுமுல்லு.. எந்த பட்டன் தட்டினாலும் திமுகவுக்கு போகும்படி புரோகிராம் செய்திருக்கிறார்கள்.... எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

ஓட்டு மெஷினில் தில்லுமுல்லு.. எந்த பட்டன் தட்டினாலும் திமுகவுக்கு போகும்படி புரோகிராம் செய்திருக்கிறார்கள்.... எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

Edapadi Palaniswami:  வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்துள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் திமுகவுக்கு வாக்கு செல்லும்படி புரோகிராம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

    நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில்  (EVM) தில்லுமுல்லு செய்யப்பட்டதாகவும் எந்த பட்டனை அழுத்தினாலும் திமுகவுக்கு போகும்படி புரோகிராம் செய்திருந்ததாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 38 மாவட்டங்களிலும் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் திரண்ட அதிமுகவினர், ஜெயக்குமார் கைதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    அந்த வகையில், சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கள்ள ஓட்டு போடுவதில் திமுகவினர் வல்லவர்கள். பல வாக்குச்சாவடிகளை கைப்பற்றி திமுக குண்டர்களும், ரவுடிகளும் கள்ள ஓட்டு போட்டு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

    49வது வார்டில் நரேஷ் என்பவர் கள்ள ஓட்டு போட முயன்றதாக பூத்தில் பணியாற்றிய தேர்தல் அதிகாரியே தெரிவித்துள்ளார். சென்னையில் தான் அதிகமாக கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது. சென்னையில் வாக்கு குறைந்ததற்கு இதுதான் காரணம். அதிமுக ஆட்சியில் இருந்தபோது மக்கள் சுதந்திரமாக வாக்களித்தனர். ஆனால், தற்போது மக்கள் அச்சப்பட்டு ஜனநாயக கடமையை ஆற்றவில்லை.

    இதையும் படிங்க: எப்போதும் வெடிகுண்டு சத்தம்... கழிவறை கூட இல்லை: உக்ரைனில் பரிதவிக்கும் தமிழக மாணவி கதறல்..


     வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்துள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் திமுகவுக்கு வாக்கு செல்லும்படி புரோகிராம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் இல்லாத நிலை இந்த தேர்தலில் நடந்துள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றிருந்ததால் அதிமுகதான் வெற்றி பெற்றிருக்கும் என்று தெரிவித்தார்.




    பரிசு பொருட்களை கொடுத்து, பணத்தை கொடுத்து அதற்கும் மேல் வாக்கு எந்திரத்தில் முறைகேடு செய்துதான் திமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர் என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, இது மாயாஜால வெற்றி என்றும் உண்மையான வெற்றி இல்லை என்றும் குறிப்பிட்டார்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: ADMK, Edappadi Palaniswami

    அடுத்த செய்தி