Home /News /tamil-nadu /

நாளை தேர்தல் - சென்னையில் மூன்று தொகுதிகளில் ஏற்பாடுகள் தீவிரம்!

நாளை தேர்தல் - சென்னையில் மூன்று தொகுதிகளில் ஏற்பாடுகள் தீவிரம்!

வாக்கு இயந்திரங்களை வாக்குச் சாவடிகளில் வைக்கும் அதிகாரிகள்

வாக்கு இயந்திரங்களை வாக்குச் சாவடிகளில் வைக்கும் அதிகாரிகள்

சைதாப்பேட்டையில் மொத்தம் உள்ள 259 மையங்களுக்கு 777 வாக்குபதிவு எந்திரங்களும், 259 கட்டுப்பாட்டு கருவியும், 259 விவிபேட் எந்திரமும் அனுப்பி வைக்கப்பட உள்ளன.சென்னையில் மொத்தம் 3,754 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன.

  • News18
  • Last Updated :
    தென்சென்னை, வடசென்னை மற்றும் மத்திய சென்னை  தொகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கடந்த 11-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக, தமிழகம் உட்பட 12 மாநிலங்களுக்கு மக்களவை தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

    காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், இன்று இரவுக்குள் தேர்தல் பணிகளை முழுவதுமாக முடிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதையடுத்து, தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை தொகுதிகளில், வாக்கு இயந்திரங்கள் பொருத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்டப்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு வாக்கு பதிவு எந்திரங்கள் நந்தனம் அரசு கலை கல்லூரியில் இருந்து அனுப்பி வைக்கப்பட உள்ளன.

    சைதாப்பேட்டையில் மொத்தம் உள்ள 259 மையங்களுக்கு 777 வாக்குபதிவு எந்திரங்களும், 259 கட்டுப்பாட்டு கருவியும், 259 விவிபேட் எந்திரமும் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

    சென்னையில் மொத்தம் 3,754 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. அதில் 337 மையங்கள் பதற்றமானவையாகவும், 157 மையங்கள் மிகவும் பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Also see...








    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Elections 2019, Lok Sabha Election 2019, Lok Sabha Key Constituency, Tamil Nadu Lok Sabha Elections 2019

    அடுத்த செய்தி